உருளைக்கிழங்கு வைத்து ஒரு சூப்பரான காரக் குழம்பு. இப்படி செய்து பாருங்க.
தேவையான பொருட்கள்
2 தக்காளி
8 சின்ன வெங்காயம்
¼ கப் எண்ணெய்
1 டேபிள் ஸ்புன் கடுகு
1 டேபிள் ஸ்பூன் சீரகம்
¼ ஸ்பூன் வெந்தயம்
7 பூண்டு
10 சின்ன வெங்காயம்
கரு வேப்பிலை ஒரு கொத்து
1 டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள்
3 ஸ்பூன் மல்லித் தூள்
¼ ஸ்பூன் மஞ்சள் பொடி
எலுமிச்சை அளவு புளி
செய்முறை: தக்காளி, சின்ன வெங்காயத்தை சேர்த்து அரைத்துகொள்ளவும். இரு பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து கடுகு, சீரகம், வெந்தயம் சேர்க்கவும். தொடர்ந்து சின்ன வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும். கருவேப்பிலை சேர்த்து கொள்ளவும். தொடர்ந்து சிறிய அளவு உப்பு சேர்க்கவும். தொடர்ந்து கிளரவும். தற்போது மிளகாய் தூள், மல்லித்தூள், மஞ்சள் பொடி சேர்க்கவும். தொடர்ந்து கிளரவும். தற்போது நறுக்கிய உருளைக்கிழங்கை சேர்த்து கொள்ளவும். தொடர்ந்து அரைத்த விழுதை சேர்த்து கொள்ளவும். இதை நன்றாக கிளரவும். தொடர்ந்து புளி தண்ணீர் சேர்த்து கொள்ளவும். இதை நன்றாக கிளரவும். உப்பு சேர்த்து கிளரவும். தொடர்ந்து குழம்பை 15 நிமிடங்கள் கொதிக்க வைக்க வேண்டும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“