நீங்கள் மிருதுவான சீஸ் ஃப்ரைஸ், கிரீமி பொட்டேடோ சாப்பிட விரும்புகிறவரா, ஆனால் கலோரிகளை நினைத்து பயமாக இருக்கிறதா?
உருளைக்கிழங்கின் மாவுச்சத்தை நீக்கி (இது கார்போஹைட்ரேட் நிறைந்ததாக இருக்கும்) ஆரோக்கியமானதாக மாற்ற, சில எளிய மற்றும் அற்புதமான ஹேக்ஸ் எங்களிடம் உள்ளன. மேலும் அறிய படிக்கவும்.
உருளைக்கிழங்கில் உள்ள ஸ்டார்ச்சை ஏன் நீக்க வேண்டும்?
மாவுச்சத்தின் இருப்பு, உருளைக்கிழங்கின் அமைப்பை மென்மையாக ஆக்குகிறது, ஆனால் அதே நேரத்தில் அது உருளைக்கிழங்கின் கார்போஹைட்ரேட் உள்ளடக்கத்தையும் சேர்க்கிறது.
எனவே, நீங்கள் கலோரிகளைக் குறைத்து, உங்களுக்குப் பிடித்த உருளைக்கிழங்கை, சாப்பிட விரும்பினால், மாவுச்சத்து உள்ளடக்கத்தை அகற்றுவதே சிறந்தது. உண்மையில், மாவுச்சத்தை நீக்குவது, வறுத்த அல்லது வேகவைத்த மிருதுவான உருளைக்கிழங்கு சுவையை, இன்னும் சிறப்பாக ஆக்குகிறது.
உருளைக்கிழங்கிலிருந்து மாவுச்சத்தை எப்படி அகற்றுவது என்பது இங்கே.
குளிர்ந்த நீரில் ஊறவைக்கவும்
ஸ்டார்ச் என்பது உருளைக்கிழங்கை வெட்டும்போது, வெளியாகும் ஒட்டும் திரவமாகும், அதை அகற்றுவதற்கான சிறந்த வழி, ஒரு பெரிய பாத்திரத்தில் நறுக்கிய உருளைக்கிழங்கை ஊறவைப்பதாகும்.
தண்ணீர் குளிர்ச்சியாக இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள், அதை ஓரிரண்டு முறை கழுவுவது சதையின் மேல் அடுக்கில் உள்ள ஸ்டார்ச்சை அகற்ற உதவுகிறது.
/indian-express-tamil/media/media_files/hC57bJPoRvMhEOC8MjII.jpg)
குளிர்ந்த நீரில் ஒரு முறை கழுவிய பின், அனைத்து உருளைக்கிழங்கு துண்டுகளையும் சுத்தமான குளிர்ந்த நீரில் ஊறவைத்து, மீண்டும் கழுவவும். இப்படி செய்யும் போது, பாத்திரத்தில் ஸ்டார்ச் படிந்து, தண்ணீர் வெண்மையாக மாறுவதை நீங்கள் கவனிப்பீர்கள்.
இறுதியாக, கழுவி தண்ணீரை வெளியேற்றவும். பின்னர் உருளைக்கிழங்கை வறுக்கவும் அல்லது சமைக்கவும். மாவுச்சத்தை நீக்குவதால், பொரியல் அல்லது உருளைக்கிழங்கை கடிக்கும்போது எளிதில் நொறுங்காது. இந்த செயல்முறைக்கு நேரம் எடுக்கும், ஆனால் முடிவுகள் மதிப்புள்ளதாக இருக்கும்.
குறிப்பு: மாவுச்சத்து நிறைந்த உருளைக்கிழங்கு, பொதுவாக வறுக்கும்போது மென்மையாகவும், நொறுங்கியதாகவும் மாறும். எனவே, உருளைக்கிழங்கு மிருதுவாகவும், சுவையாகவும் இருக்க மாவுச்சத்தை நீக்குவதே சிறந்த வழியாகும்.
ஆனால் நீங்கள் கிரீமி பொட்டேடோ, சூப் அல்லது ஸ்மேஷ்டு பொட்டேடோ செய்கிறீர்கள் என்றால், மாவுச்சத்தை அகற்றாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“