ரொம்ப ஈசியான உருளைக்கிழங்கு வறுவல் எப்படி செய்து என்பதை தெரிந்துகொள்வோம்.
தேவையான பொருட்கள்
எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
உருளை கிழங்கு - 4 (பெரியது - 3/4 பதத்தில் வேக வைத்தது)
கடுகு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீ ஸ்பூன்
பச்சை மிளகாய் - 2 (கீறியது)
கருவேப்பிலை
வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
தக்காளி - 2 (பொடியாக நறுக்கியது)
இஞ்சி பூண்டு விழுது - 2 டீ ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீ ஸ்பூன்
மல்லி தூள் - 1/2 டீ ஸ்பூன்
காஸ்மீரி மிளகாய் தூள் - 1 1/2 டீ ஸ்பூன்
கரம் மசாலா - 1 டீ ஸ்பூன்
வெந்தய இலை போடி - 1 ஸ்பூன்,
செய்ய வேண்டியவை
முதலில் ஒரு கடாய் எடுத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும் வேக வைத்த உருளை கிழங்கை 5 நிமிடத்திற்கு வதக்கி தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும். எண்ணெய் பிரை பன்னாமல் கூட நாம் தயார் செய்யலாம்.
ப்போது ஒரு பாத்திரம் எடுத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, சீரகம், பச்சை மிளகாய், கருவேப்பிலை ஆகிவற்றை இட்டு வதக்கி கொள்ளவும். பின்னர் நறுக்கிய வெங்காயம் மற்றும் தக்காளியை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.
பிறகு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாடை போகும் வரை நன்றாக வதக்கி கொள்ளவும். பிறகு மஞ்சள் தூள், காஸ்மீரி மிளகாய் தூள், மல்லி தூள் சேர்த்து கிளறி தண்ணீர் விட்டு 3-4 நிமிடங்களுக்கு கொதிக்க விடவும்.
அதன்பின்னர், கரம் மசாலா, வெந்தய இலை போடி சேர்த்து கிளறவும். தொடர்ந்து முன்னர் வேகவைத்துள்ள உருளை கிழங்கை அதில் இட்டு மசாலா நன்கு சேரும் வரை கிளறி வேக வைத்து கீழே இறக்கவும். இவற்றை ரசம் மற்றும் அனைத்து வித சாதத்தோடும் சேர்த்து சுவைத்து மகிழவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“