மளிகைப் பொருட்களை வாங்கும்போது, ஒரு பெரிய பையில் உருளைக்கிழங்கு நல்ல விலையில் இருப்பதைக் கண்டால், உடனே அதை வாங்கி விடுகிறோம். ஆனால் இந்த உருளைக்கிழங்கு நீண்ட காலமாக பயன்படுத்தாமல் இருந்தால், அதில் சிறிய பச்சை வேர்கள் முளைக்க ஆரம்பிக்கும்.
முளைத்த உருளைக்கிழங்கில் இரண்டு தீங்கு விளைவிக்கும் கூறுகள் உள்ளன: கிளைகோல்கலாய்டுகள் மற்றும் சோலனைன் glycoalkaloids, solanine, அவை அதிக அளவில் உட்கொள்ளும்போது தீங்கு விளைவிக்கும். இவற்றை சாப்பிடுவதால் வயிற்றில் கோளாறு ஏற்பட்டு இதயம் மற்றும் நரம்பு மண்டலம் பாதிக்கப்படும். தீவிர நிகழ்வுகளில், அது ஆபத்தானது.
உருளைக்கிழங்கு முளைக்கும் ஆரம்ப கட்டங்களில் முளைகள் மற்றும் மென்மையான புள்ளிகளை அகற்ற பரிந்துரைக்கப்படுகிறது, என்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் வீணா. (a dietician at Aster Whitefield Hospital)
நீண்ட காலமாக முளைத்திருக்கும் உருளைக்கிழங்கை அப்புறப்படுத்துவது நல்லது.
கிளைகோஅல்கலாய்டுகளின் அளவு அதிகரிப்பது உருளைக்கிழங்கிற்கு கசப்பான சுவையைத் தருகிறது, இதனால் அவை சாப்பிட விரும்பத்தகாததாக இருக்கும், என்கிறார் ஆயுர்வேத மருத்துவர் டாக்டர் வரலக்ஷ்மி யனமந்த்ரா.
என்ன செய்யலாம்?
முளைகளை, கைகளாலோ அல்லது கூர்மையான வெஜிடபிள் பீலர் மூலமோ அகற்றவும்.
பீலர், முளையின் வேரைத் திறம்பட எடுக்க முடியும். இந்த முளைகளை அகற்றிய பிறகு, அழுக்குகளை அகற்ற துருவிய உருளைக்கிழங்கைக் கழுவுவது நல்லது.
ஒளி, வெப்பம் மற்றும் ஈரப்பதம் உட்பட, முளைப்பதைத் துரிதப்படுத்தும் பல காரணிகள் இருக்கலாம். முளைப்பதை மெதுவாக்க, உருளைக்கிழங்கை குளிர்ந்த, இருண்ட மற்றும் உலர்ந்த இடங்களில் சேமிக்கவும்.
வெங்காயம், ஆப்பிள், ஆரஞ்சு போன்ற பழங்களை உருளைக்கிழங்கிலிருந்து விலக்கி வைக்கவும், அவை எத்திலீன் வாயுவை வெளியிடுகின்றன, இது உருளைக்கிழங்கில் முளைக்கும் செயல்முறையை துரிதப்படுத்துகிறது, என்று டாக்டர் வீணா கூறினார்.
Read in English: Why you should steer clear of sprouted potatoes
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“