கசகசா, பாதமை ஊறவைத்து இப்படி அப்ளை பண்ணுங்க… நேச்சுரல் ஹேர் டை இதுதான்; டாக்டர் தீபா

வீட்டு சமையலறையில் இருக்கும் பொருட்களைக் கொண்டே தலைமுடியைக் கருமையாக்கி, ஆரோக்கியமாகப் பராமரிக்க இயற்கையான முறையில், பக்க விளைவுகள் இன்றி நேச்சுரல் ஹேர் டை செய்வது எப்படி? என்று மருத்துவர் தீபா செய்முறைகளைப் பகிர்ந்து கொள்கிறார்.

வீட்டு சமையலறையில் இருக்கும் பொருட்களைக் கொண்டே தலைமுடியைக் கருமையாக்கி, ஆரோக்கியமாகப் பராமரிக்க இயற்கையான முறையில், பக்க விளைவுகள் இன்றி நேச்சுரல் ஹேர் டை செய்வது எப்படி? என்று மருத்துவர் தீபா செய்முறைகளைப் பகிர்ந்து கொள்கிறார்.

author-image
WebDesk
New Update
informative video,

கசகசா, பாதமை ஊறவைத்து இப்படி அப்ளை பண்ணுங்க… நேச்சுரல் ஹேர் டை இதுதான்; டாக்டர் தீபா

இளநரை, முடி உதிர்வு, பொடுகுத் தொல்லை என தலைமுடி சார்ந்த பிரச்சனைகள் இன்று பலரையும் வாட்டி வதைக்கின்றன. இதற்குத் தீர்வாகக் கடைகளில் விற்கப்படும் ரசாயனம் கலந்த ஹேர் டை பயன்படுத்தும்போது, தற்காலிகத் தீர்வைக் கொடுத்தாலும், நீண்ட காலத்திற்கு முடியின் ஆரோக்கியத்தைக் கெடுத்து, மேலும் பல பிரச்னைகளுக்கு வழிவகுக்கின்றன.

Advertisment

வீட்டு சமையலறையில் இருக்கும் பொருட்களைக் கொண்டே தலைமுடியைக் கருமையாக்கி, ஆரோக்கியமாகப் பராமரிக்க இயற்கையான முறையில், பக்க விளைவுகள் இன்றி நேச்சுரல் ஹேர் டை செய்வது எப்படி? என்று மருத்துவர் தீபா செய்முறைகளைப் பகிர்ந்து கொள்கிறார். அதனை இந்தப் பதிவில் காணலாம்.

1. கசகசா மற்றும் பாதாம் பேக்:

2 ஸ்பூன் கசகசா மற்றும் 3 பாதாம் பருப்பை இரவு முழுவதும் தண்ணீரில் ஊறவைக்கவும். காலையில் அதை நன்றாக அரைத்து, அதனுடன் 1 தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் மற்றும் 1 தேக்கரண்டி பால் சேர்த்து கலக்கவும். இந்த பேஸ்ட்டை தலையில் தடவி, ஒரு மணி நேரம் கழித்து அலசவும். இது முடிக்கு நல்ல போஷாக்கு அளித்து, மென்மையாக மாற்றும்.

2. செம்பருத்தி பேக்:

புதிதாகப் பறித்த செம்பருத்திப் பூக்களை நன்றாக அரைத்து பேஸ்ட் ஆக்கிக்கொள்ளவும். இந்த பேஸ்ட்டை தலையில் தடவி, ஒரு மணி நேரம் ஊறவைத்துக் குளித்தால், முடி இயற்கையாகவே கண்டிஷனிங் செய்யப்பட்டு பளபளப்பாக மாறும்.

3. டீ மற்றும் காபி டை

Advertisment
Advertisements

4 ஸ்பூன் டீ தூளை தண்ணீரில் கொதிக்க வைத்து, திக்கான டிகாக்‌ஷனை வடிக்கட்டி எடுக்கவும். அதனுடன் 4 தேக்கரண்டி காபித் தூளைச் சேர்த்து நன்றாகக் கலக்கவும். இந்தக் கலவையைத் தலைமுடியில் தடவி 1 மணி நேரம் கழித்து அலசினால், முடிக்கு உடனடியான கருமை நிறம் கிடைக்கும்.

பொடுகுத் தொல்லைக்கு: தேங்காய் எண்ணெய்யுடன் சிறிது எலுமிச்சை சாறு கலந்து வேர்க்கால்களில் தடவி மசாஜ் செய்யலாம்.

முடி உதிர்வைத் தடுக்க: முட்டையின் வெள்ளைக் கருவுடன் சிறிது தயிர் கலந்து தலையில் தடவி, 20-30 நிமிடங்கள் கழித்து அலசலாம்.

முக்கிய குறிப்பு: எந்த ஒரு ஹேர் பேக் அல்லது டையைப் பயன்படுத்துவதற்கு முன்பும், பேட்ச் டெஸ்ட் செய்வது மிகவும் அவசியம். தயாரித்த கலவையை காதின் பின்புறம் அல்லது மணிக்கட்டில் சிறிதளவு தடவி, 24 மணி நேரம் வரை ஏதேனும் ஒவ்வாமை அல்லது அரிப்பு ஏற்படுகிறதா என்று சோதித்துப் பார்த்த பின்னரே தலையில் பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்துகிறார் மருத்துவர் தீபா.

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.

Lifestyle

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: