மானியத்துடன் வீடு கட்ட கடன்: நிர்மலா சீதாராமன் அறிவித்த இந்தச் சலுகையை கவனித்தீர்களா?
Pradhan Mantri Awas Yojana Housing scheme: வீட்டு கடன்களுக்கு மத்திய அரசு நேரடி மானியம் வழங்கும். குறிப்பிட்ட வரம்புகளுக்கு கீழே வருமானம் உள்ளவர்களுக்கு இந்த திட்டம் பொருந்தும்.
Pradhan Mantri Awas Yojana Housing scheme: வீட்டு கடன்களுக்கு மத்திய அரசு நேரடி மானியம் வழங்கும். குறிப்பிட்ட வரம்புகளுக்கு கீழே வருமானம் உள்ளவர்களுக்கு இந்த திட்டம் பொருந்தும்.
Pradhan Mantri Awas Yojana Housing, pmayg.nic.in 2020-21 gramin, pmay-g, pmayg.nic.in, pmayg, பிரதமர் மோடி, பிரதமர் வீடு மானியம் கடன் திட்டம்
PMAY Tamil News: Pradhan Mantri Awas Yojana திட்டத்தின் கீழ் கடன் மானிய திட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளது. ரூபாய் 6 லடசம் முதல் ரூபாய் 18 லட்சம் வரை வருமானம் உள்ள நடுத்தர வர்க்கத்தின் கீழ் அடுக்குகளுக்கு இது பயனளிக்கும்.
Advertisment
Pradhan Mantri Awas Yojana திட்டத்தின் கீழ் கடன் இணைக்கப்பட்ட மானிய திட்டம் (credit linked subsidy scheme) 2021 மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். ரூபாய் 6 லடசம் முதல் ரூபாய் 18 லட்சம் வரை வருமானம் உள்ள நடுத்தர வர்க்கத்தின் கீழ் அடுக்குகளுக்கு இது பயனளிக்கும். இது நடுத்தர வர்க்கத்திற்கான புதிய வீடுகளின் விலையைக் குறைக்க உதவும்.
இந்த திட்டத்தில் சுமார் 3.3 லட்சம் குடும்பங்கள் பயனடைந்துள்ளன. மேலும் நீட்டிக்கப்பட்ட பின்னர் மேலும் 2 லட்சம் குடும்பங்கள் இதன் மூலம் பயனடைய வாய்ப்புள்ளது என நிதி அமைச்சர் தெரிவித்தார். இந்த நடவடிக்கை வேலைகளை உருவாக்குவதோடு எஃகு மற்றும் வீட்டுப் கட்டுமான பொருட்கள் போன்ற பிற துறைகளையும் மேம்படுத்தும்.
Advertisment
Advertisements
Pradhan Mantri Awas Yojana Housing scheme: மத்திய அரசு நேரடி மானியம்
கட்டுமானத்துறையை ஊக்குவிக்கும் இந்த திட்டமானது, குறைந்த விலை வீடுகளை வாங்கும் நகர்புற வாங்குபவர்கள் எடுத்துள்ள வீட்டு கடன்களுக்கு மத்திய அரசு நேரடி மானியம் வழங்கும். குறிப்பிட்ட வரம்புகளுக்கு கீழே வருமானம் உள்ளவர்களுக்கு இந்த திட்டம் பொருந்தும்
National Housing Bank (NHB) மற்றும் Housing and Urban Development Corporation Ltd (HUDCO) ஆகியவை வீட்டு நிதி நிறுவங்கள் மற்றும் வங்கிகளுக்கான மானியம் வழங்குவதை வரன்முறைப்படுத்து.
புலம்பெயர்ந்தோர் மற்றும் நகர்புற ஏழைகளுக்காக நிதி அமைச்சர் மலிவுவிலை வாடகை வீடுகள் திட்டத்தையும் அறிவித்தார்.
இந்தத் திட்டத்தின் கீழ், மாநில அரசுகள், தொழில்துறை மற்றும் பிற அமைப்புகள் இத்தகைய திட்டத்தை கொண்டு வர ஊக்குவிக்கப்படும். இந்த திட்டம் PM Awas Yojona வின் கீழ் கொண்டுவரப்படும். இத்திட்டத்தின் விவரங்கள் விரைவில் வெளியிடப்படும்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"