Advertisment

விவசாயிகளுக்கு ஸ்பெஷல் ஸ்கீம்: இவ்வளவு மலிவான இன்சூரன்ஸ் எங்கும் கிடையாது

Pradhan Mantri Fasal Bima Yojana: காப்பீட்டு நிறுவனத்தை தொடர்பு கொள்ள 18002005142 or 1800120909090 என்ற கட்டணமில்லா எண்ணில் அழைக்கலாம். அல்லது காப்பீட்டு நிறுவனம் மற்றும் வேளான் துறை நிபுணரை காப்பீட்டு தொகையை கோர அழைக்கலாம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
farmer

Pradhan Mantri Fasal Bima Yojana, Kharif crops, farmers, insurance, Government Scheme, crop protection, Pradhan Mantri Fasal Bima Yojana news, Pradhan Mantri Fasal Bima Yojana news in tamil, Pradhan Mantri Fasal Bima Yojana latest news, Pradhan Mantri Fasal Bima Yojana latest news in tamil, பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டம், விவசாயிகள், பயிர் பாதுகாப்பு, காப்பீடு, அரசு திட்டம், காலக்கெடு

பிரதம மந்திரி பஸல் பீமா யோஜனா (Pradhan Mantri Fasal Bima Yojana) திட்டத்தின் கீழ் காரீப் பயிர் (Kharif crops) காப்பீட்டுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 31 ஜீலை 2020. காப்பீட்டு வசதியை பெற விரும்பாத கடன்பட்ட விவசாயிகள் கடைசி தேதிக்கு ஏழு நாட்களுக்கு முன்னர் தங்கள் கிளைக்கு எழுத்துப்பூர்வமாக தெரிவிக்க வேண்டும். கடன்படாத விவசாயிகள் பயிர் காப்பீட்டை பொது சேவை மையங்கள், வங்கிகள், முகவர்கள் அல்லது காப்பீட்டு வலைதளங்கள் மூலமாக தாங்களாகவே செய்த்துக்கொள்ளலாம்

Advertisment

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ

பிரதம மந்திரி பஸல் பீமா யோஜனா என்றால் என்ன ?

பருவம் தவறி பெய்யும் மழை மற்றும் அதிகப்படியான மழையால் ஏற்படும் பயிர் இழப்பை பிரதம மந்திரி பஸல் பீமா யோஜனா ஈடு செய்கிறது. திடீரென வானிலையில் ஏற்படும் மாற்றம் விவசாயிகளின் கடின உழைப்பு வருவாயை அழிக்கக்கூடும். இத்தகைய சூழ்நிலைகளில் விவசாயிகளுக்கு உதவுவதற்காக இந்திய அரசு இந்த திட்டத்தை 13 ஜனவரி 2016 ல் தொடங்கியது.

வேளான் அமைச்சரின் கூற்றுப்படி, இந்த திட்டத்தின் கீழ் ஆலங்கட்டி மழை, தண்ணீர் தேக்கம், மேக வெடிப்பு, இயற்கை தீ விபத்து போன்றவற்றால் ஏற்படும் சேதங்களும் அடங்கும். பிரதம மந்திரி பஸல் பீமா யோஜனா திட்டத்தின் நன்மைகளைப் பெற விதை விதைத்த 10 நாட்களுக்குள் விவசாயிகள் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும். இயற்கை பேரழிவு காரணமாக பயிர் சேதமடைந்திருந்தால் மட்டுமே காப்பீட்டின் நன்மை வழங்கப்படும். விதைப்பு மற்றும் அறுவடை நிலைகளுக்கு இடைப்பட்ட பருவத்தில் உள்ள பயிர்களுக்கு இயற்கை பேரழிவு, நோய்கள் மற்றும் பூச்சி தாக்குதல்கள் மற்றும் பிற உள்ளூர் பேரழிவுகளான புயல் காற்றுடன் கூடிய பெருமழை, நிலச்சரிவு, மேக வெடிப்பால் ஏற்படும் பெருமழை மற்றும் மின்னல் தாக்கியதால் ஏற்படும் இழப்பு ஆகியவற்றுக்கும் ஈடுசெய்யப்படுகிறது.

பிரதம மந்திரி பஸல் பீமா யோஜனா திட்டத்தில் நன்மையை எவ்வாறு பெறுவது

அறுவடைக்கு பிறகு அடுத்த 14 நாட்களுக்கு வயலில் உலர்த்துவதற்காக வைக்கப்பட்டுள்ள பயிர்களுக்கு பருவம் தவறிய புயல், பெருமழை, புயல் ஆகியவற்றால் ஏற்படக்கூடிய சேதங்களுக்கு காப்பீட்டு நிறுவனம் ஈடுசெய்யும். சாதகமற்ற பருவகால நிலமைகளால் நீங்கள் விதை விதைக்கவில்லை என்றாலும் உங்களுக்கு நன்மைகள் கிடைக்கும்.

ஒருவர் காரீப் பயிர்களுக்கு 2 சதவிகித ப்ரீமியத்தையும், ராபி பயிர்களுக்கு 1.5 சதவிகித ப்ரீமியத்தையும் செலுத்த வேண்டும். பிரதம மந்திரி பஸல் பீமா யோஜனா திட்டம் தோட்டகலை பயிர்கள் மற்றும் வணிக பயிர்களுக்கும் காப்பீட்டு பாதுகாப்பை வழங்குகிறது. இந்த திட்டத்தில் விவசாயிகள் 5 சதவிகித ப்ரீமியத்தை செலுத்த வேண்டும். இந்த திட்டத்தில் நன்மைகளைப் பெற விவசாயின் ஒரு புகைப்படம், எதாவது ஒரு அடையாள அட்டை, முகவரி சான்று, வயலில் பயிரின் புல மாதிரியின் காஸ்ரா எண் (khasra number) ஆகியவற்றை வழங்கவேண்டும்.

காப்பீட்டு நிறுவனத்தை தொடர்பு கொள்ள 18002005142 or 1800120909090 என்ற கட்டணமில்லா எண்ணில் அழைக்கலாம். அல்லது காப்பீட்டு நிறுவனம் மற்றும் வேளான் துறை நிபுணரை காப்பீட்டு தொகையை கோர அழைக்கலாம்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Narendra Modi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment