Pradhan Mantri Jan Dhan Yojana (PMJDY) என்பது உலகத்திலுள்ள மிகப்பெரிய நிதி சேர்கை முயற்சிகளில் (financial inclusion initiatives) ஒன்று. வங்கி/ சேமிப்பு மற்றும் வைப்பு கணக்குகள், கடன், பணம் செலுத்துதல், காப்பீடு, குறைந்த கட்டணத்திலான ஓய்வூதியம் ஆகியவை நிதி சேவையில் அடங்கும். ஆகஸ்ட் 15, 2014 ஆம் தேதி செங்கோட்டையில் வைத்து பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் இந்த திட்டம் அறிவிக்கப்பட்டு 28 ஆகஸ்ட் அன்று துவங்கப்பட்டது.
Pradhan Mantri Jan Dhan Yojana (PMJDY) அம்சங்கள்
நாட்டில் உள்ள அனைத்து கிராமப்புற மற்றும் நகர்புற பகுதிகள் இந்த திட்டத்தில் உள்ளடங்கும். ஒவ்வொரு வீட்டிற்கும் வங்கி சேவையை அணுக குறைந்தது ஒரு அடிப்படை வங்கி கணக்கை இத்திட்டம் வழங்குகிறது. மக்கள தங்கள் வங்கி கணக்கை எந்த வங்கி கிளையிலும் துவங்கலாம்.
Pradhan Mantri Jeevan Jyoti Bima Yojana (PMJJBY), Pradhan Mantri Suraksha Bima Yojana (PMSBY), Atal Pension Yojana (APY) and Pradhan Mantri Mudra Yojana (PMMY) ஆகிய பாதுகாப்புத் திட்டங்களுக்கு PMJDY ஒரு நடைமேடையை வழங்குகிறது.
Zero balance ஆக PMJDY கீழ் துவங்கப்படும் கணக்குகள் இருக்கலாம். கணக்கு வைத்திருப்பவருக்கு cheque book வேண்டுமென்றால் அவர் குறைந்தபட்ச இருப்பு வைத்திருக்க வேண்டும்.
இந்த திட்டத்தின் கீழ் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு ஒரு RuPay debit card வழங்கப்படும். அதை அனைத்து ஏடிஎம் களிலும் பணம் எடுப்பதற்கு பயன்படுத்தலாம்.
Pradhan Mantri Jan Dhan Yojana (PMJDY) சிறப்பு நன்மைகள்
வைப்புகளுக்கு வட்டி வழங்கப்படும்.
ஒரு லட்சம் அளவிலான விபத்து காப்பீடு அளிக்கப்படும்.
குறைந்தபட்ச வைப்புத் தொகையை பராமரிக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் RuPay Card ஐ பயன்படுத்தி எந்த ஏடிஎம் களிலிருந்தும் பணம் எடுக்க குறைந்த வைப்பு தேவை அதை கணக்கில் வைத்திருக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது.
தகுதி நிபந்தனைகளை பூர்த்தி செய்தால் Life cover ஆக ரூபாய் 30,000/- ம் பயனாளியின் மரணத்தின் போது கொடுக்கப்படும்.
இந்தியா முழுவதும் எளிதாக பண பரிமாற்ற வசதி
அரசு திட்டங்களின் மூலம் பயன்பெறுபவர்கள் தங்கள் கணக்குகளில் நேரடியாக நன்மைகள் பரிமாற்றத்தை பெறுவார்கள்.
கணக்கின் ஆறு மாத காலம் திருப்திகரமாக செயல்பாட்டிற்கு பிறகு overdraft வசதி வழங்கப்படும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.