இந்திய அரசால் 2014 ஆம் ஆண்டு பிரதம மந்திரியின் Jan Dhan கணக்கு (Pradhan Mantri Jan Dhan Yojana - PMJDY) தொடங்கப்பட்டது. அனைத்து தரப்பு மக்களையும் வங்கி அமைப்புடன் இணைப்பதே இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். ஒவ்வொரு குடும்பத்துக்கும் அல்லது தனிநபருக்கும் குறைந்தபட்சம் ஒரு வங்கி கணக்கு இருக்க வேண்டும் என்பதை உறுதிசெய்வதே இந்த திட்டத்தின் நோக்கமாகும். அரசு வழங்கும் அனைத்து நிதி மானியங்களையும், வங்கி திட்டங்களையும் எந்தவித இடைத்தரகர் அல்லது காண்ட்ராக்டரின் தலையீடும் இல்லாமல் நேரடியாக அனைத்து குடிமக்களும் பெறுவது இத்திட்டத்தின் மற்றொரு நோக்கமாகும். மேலும் மக்களுக்கு சேரவேண்டிய பலன்கள் ஏமாற்றப்படுவதும் தடுக்கப்படுகிறது.
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ
இந்த திட்டத்தின் கீழ் திறக்கப்படும் கணக்குகள் அடிப்படை சேமிப்பு வங்கி வைப்புகள் (Basic Savings Bank Deposit -BSBD). மேலும் RuPay debit அட்டை மற்றும் overdraft அம்சமும் இக்கணக்குகளுக்கு உண்டு. PMJDY இந்த திட்டத்தின் கீழ் வங்கி கணக்கு துவங்க நீங்கள் இந்திய குடிமகனாக இருக்க வேண்டும். மேலும் 10 வயதுக்கு மேல் உள்ளவர்கள் இந்த திட்டத்தின் கீழ் கணக்கை திறக்க தகுதியுடையவர்கள்.
STEP 1 : ஆவணங்கள்
Jan Dhan கணக்கை திறக்க தகுதிச் சான்றாக அனுமதிக்கப்படும் ஆவணங்கள்
ஓட்டுனர் உரிமம்,
ஆதார் அட்டை,
இந்திய தேர்தல் ஆணையத்தால் வழங்கப்படும் வாக்காளர் அடையாள அட்டை,
கடவுச்சீட்டு (Passport),
நிரந்தர கணக்கு எண் அட்டை (PAN card),
தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட அடையாள அட்டை (மாநில அரசு அலுவலரால் கையொப்பம் இடப்பட்டது)
அல்லது மத்திய அரசால் notified செய்யப்பட்ட ஏதாவதொரு ஆவணம்.
STEP 2 PMJDY விண்ணப்ப படிவம்
பிரதம மந்திரியின் Jan Dhan Yojana விண்ணப்ப படிவத்தை Pradhan Mantri Jan Dhan Yojana வின் அதிகாரப்பூர்வ இணையதளத்திலிருந்தோ அல்லது ஏதாவதொரு வங்கி இணையதளத்திலிருந்தோ பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம்.
STEP 3 KYC விவரங்கள்
விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து, அடையாள ஆவணம், முகவரிச் சான்று ஆகியவற்றை இணைத்து அதனோடு KYC விவரங்களை முழுவதுமாக பூர்த்தி செய்ய வேண்டும்.
STEP 4 அதை அருகில் உள்ள வங்கி கிளைக்கு கொண்டு செல்லவும்.
நீங்கள் Jan Dhan கணக்கு திறக்க நினைக்கும் வங்கி கிளைக்கு இந்த ஆவணங்கள் மற்றும் கணக்கு திறப்பதற்கான விண்ணப்பத்தையும் எடுத்துச் செல்லவும்.
STEP 5 சரிபார்ப்பு (Verification)
உங்கள் ஆவணங்களை முறையாக சரிபார்த்த பின்னர், உங்கள் வங்கி கணக்கு திறக்கப்படும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.