PM Jan Dhan Yojana : நாடுதழுவிய ஊரடங்குக்கு மத்தியில் அரசு விவசாயிகள், பணியாளர்கள் மற்றும் ஏழைகளின் நலனுக்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மத்திய அரசின் Pradhan Mantri Jan-Dhan Yojana (PMJDY) திட்டத்தின் கீழ் வங்கிகளில் பூஜ்ஜிய இருப்பு கணக்குகள் ஏழை மற்றும் ஆதரவற்றவர்களுக்காக திறக்கப்படுகின்றன. எரிவாயு உருளை மானியம், விதவை ஓய்வூதியம், Kisan Samman Nidhi போன்ற திட்டங்களின் கீழ் நிதி உதவி இந்த வங்கி கணக்குகளில் வழங்கப்படுகிறது. சமீபத்தில் 10 வயதுக்கு மேற்பட்ட சிறு குழந்தைகளும் Jan Dhan Yojana திட்டத்தின் கீழ் வங்கி கணக்கை தொடங்கலாம் என அரசு அனுமதியளித்துள்ளது. மேலும் கணக்கை எந்தவொரு வங்கி கிளை அல்லது தபால் நிலைய வங்கியிலும் (post office payment bank) தொடங்கலாம்.
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ
ரூபாய் 10,000 வரையிலான overdraft வசதி உள்ளது
அரசு சான்றளித்துள்ள அடையாள ஆவணம் உள்ள யார் வேண்டுமானாலும் எளிதாக இந்த வங்கி கணக்கை திறக்க முடியும். எனினும் விதிகளின்படி, குழந்தையின் பாதுகாவலர் குழந்தையின் பெயரில் இந்த கணக்கை இயக்குவார். ஏடிஎம் அட்டையும் குழந்தையின் பெயரில் வழங்கப்படும். குழந்தை 18 வயதை அடைந்ததும், ஒரு அடையாள ஆவணத்தை சமர்பித்த பிறகு வங்கி இந்த கணக்கை உண்மையான பயனாளியின் பெயரில் ஒப்படைக்கும்.
PMFBY க்கான முக்கியமான ஆவணங்கள் (10 வயதுக்கு மேல்)
ஆதார் அட்டை, கடவுச்சீட்டு அல்லது ரேஷன் அட்டை போன்ற ஏதாவது ஒரு சரியான ஆவணத்தை பெற்றோர் சமர்பிக்க வேண்டும். இதில் உள்ள எந்த ஆவணமும் பெற்றோரிடன் இல்லையென்றால் அடையாளத்தை வெளிப்படுத்த மத்திய அரசு வழங்கியுள்ள ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை சமர்ப்பிக்கவும்.
Pradhan Mantri Jan Dhan Yojana திட்டத்தின் கீழ் வங்கி கணக்கை திறக்க அதற்கான விண்ணப்ப படிவத்தை PM Jan Dhan Yojana இணையதளத்திலிருந்து அல்லது ஏதாவது ஒரு வங்கியின் வலைதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துக் கொள்ள வேண்டும். வங்கி கிளைகளிலும் இதற்கான படிவங்கள் கிடைக்கும். வங்கி கிளைக்கு நேரில் சென்றும் இதை வாங்கி நிரப்பலாம்.
PMFBY க்கு ஆன்லைன் மூலமாக எப்படி விண்ணப்பிப்பது
Pradhan Mantri Jan Dhan Yojana திட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்துக்கு https://pmjdy.gov.in/ செல்லவும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.