Pradhan Mantri MUDRA Yojana, PMMY, Narendra modi, loans, on-farm small/micro enterprises, PMMY news, PMMY news in tamil, PMMY latest news, PMMY latest news in Tamil
Pradhan Mantri MUDRA Yojana அல்லது PMMY என்பது பிரதம மந்திரி நரேந்திர மோடி அவர்களால் ஏப்ரல் 8, 2015 ஆம் நாள் தொடங்கப்பட்ட ஒரு மத்திய அரசு திட்டம். PM MUDRA Yojana திட்டம் என்பது பெறு நிறுவனம் அல்லாத (non-corporate), விவசாயம் அல்லாத (non-farm) சிறு மற்றும் குறு தொழில் நிறுவனங்களுக்கு ரூபாய் 10 லட்சம் வரை கடன் வழங்குவதற்காக ஆரம்பிக்கப்பட்டது. இந்த கடன்கள் PMMY கீழ் முத்ரா (MUDRA) கடன்கள் என்றழைக்கப்படும்.
Advertisment
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ
PM MUDRA Yojana கடன்களை எவ்வாறு பெறுவது?
Advertisment
Advertisements
வணிக வங்கிகள், சிறு நிதி வங்கிகள், RRBs MFIs மற்றும் NBFCs மூலமாக இந்த கடன்கள் வழங்கப்படுகிறது. கடன் வாங்க நினைப்பவர்கள் மேலே குறிப்பிடப்பட்டுள்ள ஏதாவது கடன் வழங்கும் நிறுவனங்களை நேரடியாக அணுகலாம், மேலும் அவர்கள் www.udyamimitra.in என்ற இணையதளம் வாயிலாகவும் விண்ணப்பிக்கலாம்.
குறு அலகு (micro unit) அல்லது தொழில் முனைவோர் பயனாளிகளின் வளர்ச்சியின் கட்டத்தை குறிக்க அல்லது அவர்களின் முன்னேற்றம் மற்றும் நிதி தேவைகளுக்காக PM MUDRA திட்டத்தின் கீழ் MUDRA 3 தயாரிப்புகளை உருவாக்கியுள்ளது அவை 'Shishu', 'Kishore' மற்றும் 'Tarun' என்பனவாகும்.
Shishu: PMMY கீழ் ரூபாய் 50,000/- வரை கடன்களை உள்ளடக்கும்
Kishor: PMMY கீழ் ரூபாய் 50,000/- க்கு மேல் ரூபாய் 5 லட்சம் வரையிலான கடன்கள் உள்ளடக்கும்.
Tarun : PM Mudra Yojana திட்டத்தின் கீழ் ரூபாய் 5 லட்சம் முதல் ரூபாய் 10 லட்சம் வரையிலான கடன்கள் உள்ளடக்கும்.
PM Mudra Yojana திட்டத்தின் குறிக்கோள்
ஆர்வமுள்ள புதிய தலைமுறை இளைஞர்களிடம் தொழில்முனைவோரை ஊக்குவிப்பதே இந்த திட்டத்தின் குறிக்கோளாகும்.
Shishu பிரிவு அலகுகளுக்கு (Units) அதிக கவனம் செலுத்தப்படுவது உறுதிசெய்யப்படுகிறது. அடுத்து Kishore மற்றும் Tarun பிரிவுகளுக்கு.
MUDRA கடன்களின் நோக்கம்
MUDRA கடன்கள் வெவ்வேறு நோக்கங்களுக்காக கொடுக்கப்படுகிறது, இது வருமானம் மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கம் ஆகியவற்றுக்கு உதவுகிறது. இந்த கடன்கள் முக்கியமாக வழங்கப்படுவது
விற்பனையாளர்களுக்கான வணிக கடன், கடைகாரர்கள், வர்த்தகர்கள் மற்றும் பிற சேவைத்துறை நடவடிக்கைகள்.
வணிக பயன்பாட்டிற்கு மட்டுமேயான போக்குவரத்து வாகன கடன்கள்
குறு அலகுகளுக்கு உபகரண நிதி
முத்ரா அட்டைகள் மூலதன கடன்
மீன் வளர்ப்பு, தேனீ வளர்ப்பு, கோழி வளர்ப்பு போன்ற வேளான் தொடர்புடைய விவசாயம் அல்லாத வருமானம் ஈட்டும் நடவடிக்கைகளுக்கான கடன்கள்.
வணிக நோக்கங்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் Tractors, tillers மற்றும் இரு சக்கர வாகனங்கள்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil