/indian-express-tamil/media/media_files/7KT1auzuqMrN3jqJOF1E.jpg)
Pranitha Subhash announces second pregnancy
அருள்நிதி நடித்த உதயன் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை பிரணிதா. கன்னடம், இந்தி, தெலுங்கு மற்றும் மலையாள மொழிகளில் பல படங்களில் நடித்திருக்கிறார்.
கடந்த 2021 ஆம் ஆண்டு, தொழிலதிபர் நிதின் ராஜு என்பவரை பிரணிதா திருமணம் செய்து கொண்டார். அதன்பிறகு சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்தார். இந்த தம்பதிக்கு 2 வயதில் அர்னா என்ற மகள் இருக்கிறார்.
இந்நிலையில், பிரணிதா, தான் இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருப்பதை சோஷியல் மீடியாவில் வித்தியாசமாக அறிவித்துள்ளார்.
கருப்பு டாப்ஸ், ஜீன்ஸ் அணிந்து எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாவில் பகிர்ந்த பிரணிதா, ”ரவுண்ட் 2! பேன்ட் இனி சேராது”, என்று எழுதியுள்ளார்…
இங்கே பாருங்க
இரண்டாவது முறையாக தாயாக உள்ள பிரணிதாவுக்கு ரசிகர்கள் இன்ஸ்டாவில் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
Knock knock!
— Pranitha Subhash (@pranitasubhash) July 25, 2024
Who’s there ?
Baby !!
Baby who?
Baby #2
❤️ pic.twitter.com/NLoPzKyFio
Read in English: Pranitha Subhash announces second pregnancy
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.