Maharasi serial Praveena : சன் டிவி-யில் ஒளிபரப்பான ‘பிரியமானவள்’ சீரியலில் சாந்தமான அம்மாவாக நடித்து, ரசிகர்களின் மனதை கொள்ளைக் கொணடவர் நடிகை பிரவீனா. அந்த சீரியலில் அவர் ஏற்று நடித்திருந்த உமா என்ற கதாபாத்திரம் சின்னத்திரை ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தது. தற்போது மீண்டும் சன் டி.வி-யில் ‘மகராசி’ தொடரில் நடித்து வருகிறார்.
மகளுடன்...
தமிழ் சீரியலில் நடித்ததன் மூலம், ‘தீரன்’, ‘சாமி 2’, ‘கோமாளி’ உள்ளிட்ட தமிழ் படங்களிலும் நடித்துள்ளார். கேரளாவில் பிறந்து வளர்ந்த பிரவீனா ஏகப்பட்ட மலையாள சீரியல்களில் நடித்தும், நிறைய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியும் உள்ளார். அதோடு பல்வேறு ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் நடுவராகவும் பணியாற்றியிருக்கிறார். இதெற்கெல்லாம் மேலாக, மஞ்சு வாரியர், பத்ம பிரியா, காவ்யா மாதவன் போன்றோருக்கு 25-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் டப்பிங் பேசியிருக்கிறார்.
பிரவீனா பிரமோத்
மலையாள திரைப்படமான கெளரி திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக, தனது வாழ்க்கையைத் தொடங்கிய பிரவீனா, கலியூஞ்சலில் மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டியின் தங்கையாக வயது வந்த கலைஞராக அறிமுகமானார். பின்னர் அவர் பல வெற்றிகரமான மலையாள திரைப்படங்களில் நடித்தார். ’அக்னிசாட்சி’, ’ஓரு பெண்ணும் ராண்டனும்’ ஆகியப் படங்களில் பிரவீனா வெளிப்படுத்திய அற்புத நடிப்புக்காக, கேரள மாநில விருதுகள் அவர் வீட்டுக் கதவை தட்டின. மேலும் சிறந்த டப்பிங்கிற்காகவும் இரண்டு மாநில விருதுகளை வென்றுள்ளார்.
முன்பு துபாயில் வங்கியாளராக பணியாற்றிக் கொண்டிருந்த பிரமோத் என்பவரை, திருமணம் செய்துக் கொண்ட பிரவீனாவுக்கு இப்போது தான் 41 வயது. 10 வயது மதிக்கத்தக்க மகள் இருக்கிறார். ஆனால் அதற்குள்ளாகவே சினிமா, சீரியலில் ஹீரோக்களுக்கு அம்மாவாக கச்சிதமாக நடித்து வருகிறார். இதற்கு கதாபாத்திரத்தை முழுமையாக உள்வாங்கிக் கொள்வதே காரணம் என்கிறார் கூலாக.
குடும்பத்தினருடன்...
இவருக்கு இதாலியன், சவுத் இந்தியன் உணவும், பழைய பாடல்களும் மிகவும் பிடிக்குமாம். ஷூட்டிங் இல்லாத நாட்களில் வீட்டுத் தோட்டத்தைப் பராமரிப்பது, மகளுடன் நேரம் செலவிடுவது என மனதிற்குப் பிடித்ததை செய்து வருகிறாராம்.