Tamil Serial News: சன் டிவியில் ஒளிபரப்பான பிரியமானவள் என்ற சீரியலில் அம்மாவாக நடித்து பிரபலமானவர் பிரவீணா. சீரியல் மட்டுமல்லாமல் வெள்ளித்திரையிலும் பல படங்களில் நடித்துள்ளார். சிறந்த நடிப்புக்காக கேரள அரசின் சிறந்த நடிகைக்கான விருதையும் பெற்றுள்ளார். மேலும் சிறந்த டப்பிங் ஆர்டிஸ்ட் எனவும் கேரளாவில் புகழ் பெற்றவர்.
”நெத்தில அடிச்ச மாதிரி சொல்வேன்” ஆரியின் வார்த்தையால் கலக்கத்தில் ஹவுஸ்மேட்ஸ்
மகளுடன் பிரவீணா
பிரியமானவள் சீரியலில் உமா என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்த இவர், அந்த தொடருக்குப் பின் மீண்டும் சன் டிவி-யில் ‘மகராசி’ சீரியல் மூலம் நடிப்பைத் தொடர்ந்தார். தற்போது விஜய் டிவி-யின் ராஜா ராணி-2 சீரியலில், நாயகனுக்கு அம்மாவாக நடித்து வருகிறார்.
கலியூஞ்சல் படபிடிப்பின் போது...
தமிழ் சீரியலில் நடித்ததன் மூலம், ‘தீரன்’, ‘சாமி 2’, ‘கோமாளி’ உள்ளிட்ட தமிழ் படங்களிலும் நடித்துள்ளார். கேரளாவில் பிறந்து வளர்ந்த பிரவீனா ஏகப்பட்ட மலையாள சீரியல்களில் நடித்தும், நிறைய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியும் உள்ளார். அதோடு பல்வேறு ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் நடுவராகவும் பணியாற்றியிருக்கிறார். இதெற்கெல்லாம் மேலாக, மஞ்சு வாரியர், பத்ம பிரியா, காவ்யா மாதவன் போன்றோருக்கு 25-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் டப்பிங் பேசியிருக்கிறார்.
மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டியுடன்
மலையாள திரைப்படமான கெளரி திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக, தனது வாழ்க்கையைத் தொடங்கிய பிரவீணா, கலியூஞ்சலில் மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டியின் தங்கையாக வயது வந்த கலைஞராக அறிமுகமானார். பின்னர் அவர் பல வெற்றிகரமான மலையாள திரைப்படங்களில் நடித்தார். ’அக்னிசாட்சி’, ’ஓரு பெண்ணும் ராண்டனும்’ ஆகியப் படங்களில் பிரவீணா வெளிப்படுத்திய அற்புத நடிப்புக்காக, கேரள மாநில விருதுகள் அவர் வீட்டுக் கதவை தட்டின. மேலும் சிறந்த டப்பிங்கிற்காகவும் இரண்டு மாநில விருதுகளை வென்றுள்ளார்.
பிரவீணாவின் கேஷுவல் லுக்
துபாயில் வங்கியாளராக பணியாற்றிக் கொண்டிருந்த பிரமோத் என்பவரை, திருமணம் செய்துக் கொண்ட பிரவீணாவுக்கு இப்போது தான் 41 வயது. 10-12 வயது மதிக்கத்தக்க மகள் இருக்கிறார். ஆனால் அதற்குள்ளாகவே சினிமா, சீரியலில் ஹீரோக்களுக்கு அம்மாவாக கச்சிதமாக நடித்து வருகிறார். இதற்கு கதாபாத்திரத்தை முழுமையாக உள்வாங்கிக் கொள்வது தான் காரணமாம்.
Tamil News Today Live: இன்று முதல் இந்தியாவில் பப்ஜிக்கு நிரந்தர தடை
படபிடிப்பு இல்லாத நாட்களில் தனது குடும்பத்தினருடன் நேரம் செலவிடுவதை வழக்கமாக வைத்திருக்கும் பிரவீணா, கார்டனிங்கிலும் படு இண்ட்ரெஸ்ட் உள்ளவராம்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”