அறிமுகமே பாலசந்தர் தொடர்.. சின்னத்திரையில் கொடி கட்டிப் பறந்த ப்ரீத்தி ஹாப்பி மொமண்ட்ஸ்!

ப்ரீத்தியை பற்றி சின்னத்திரையில் இருக்கும் அனைவருக்கும் தெரியும். பக்க கிளாஸிக்கல் டான்ஸ்டர்.

preethi sanjeev keerthy suresh preethi
preethi sanjeev keerthy suresh preethi

preethi sanjeev keerthy suresh preethi : தமிழ் சினிமாவிலும், சீரியலிலும் உடன் நடித்தவர்களை திருமணம் செய்துக் கொள்வது என்பது புதிதல்ல. அந்த வகையில் சீரியலில் ரீல் ஜோடியாக நடித்து, பின் நாட்களில் ரியல் ஜோடிகளான சின்னத்திரை பிரபலங்கள் ஏராளம்.

நடிகர் விஜய்யின் நெருங்கிய நண்பராக அறியப்படும் சஞ்சீவ், சினிமாவில் நடத்ததுடன் சீரியல்களிலும் நடிக்கத் தொடங்கினார். சப்போர்ட்டிங் ரோல், நெகட்டிவ் ரோல் என மாறி மாறி கிடைத்த கதாபாத்திரங்களை சிறப்புடன் செய்யத் தொடங்கினார்.

பிறகு, 2002 ஆம் ஆண்டில் ‘மெட்டிஒலி’ தொலைக்காட்சி தொடரில் எதிர்மறை பாத்திரத்தில் நடித்து தொலைக்காட்சி துறையில் நுழைந்தார் சஞ்சீவ். பல எதிர்மறை கதாபாத்திரங்களை செய்த பிறகு, திருமதி செல்வம் (2007-2013) என்ற தொடாில் அவர் முன்னணி கதாபாத்திரத்தில் முதல் முறையாக நடித்தாா். அவரை ‘திருமதி செல்வம்’ சீரியல் நிரந்தர சின்னத்திரை நாயகனாக்கியது.

சஞ்சீவை ஒவ்வொரு வீட்டிலும் கொண்டு சேர்த்தது அந்த நாடகம். 2009 இல் சிறந்த தொலைக்காட்சி நடிகருக்கான தமிழ்நாடு மாநில விருது மற்றும் திருமதி செல்வத்தில் நடிப்பிற்காக சிறந்த நடிகருக்கான சன் குடும்பம் விருது ஆகிய விருதுகளையும் சஞ்சீவ் வென்றார்.

சீரியலில் நடித்து வந்த ப்ரீத்தியை மணந்த சஞ்சீவுக்கு லயா, ஆதவ் என இரு குழந்தைகள் உள்ளனர்.ப்ரீத்தியை பற்றி சின்னத்திரையில் இருக்கும் அனைவருக்கும் தெரியும். பக்க கிளாஸிக்கல் டான்ஸ்டர்.

இயக்குனர் பால்சந்தர் மூலம் சீரியலில் அறிமுகமானார். அதன் பின்பு சன் டிவி, ராஜ் டிவி, விஜய் டிவி என ப்ரீத்தி பயங்கர பிஸியான ஆர்டிஸ்ட். அதுமட்டுமில்லை, நடிகர் டிங்கு உடன் சேர்ந்து ஜோடி நம்பர் ஓன் நிகழ்ச்சியில் கலக்கினார். அந்த சீசனின் டைட்டில் வின்னரும் இந்த ஜோடி தான்.

அதன் பின்பு, கணவர்,பிள்ளைகள் என குடும்பத்தில் பிஸியானதால் சின்னத்திரைக்கு பாய் சொன்னார். ப்ரீத்தி கடைசியாக நடித்த நாடகம் என்றால் அது பொம்பலாட்டம். இருந்தாலும் ப்ரீத்தி இப்பவும் ரொம்ப பிஸி. தனியாக யூடியூப் சேனல் தொடங்கி அதில் கவனம் செலுத்தி வருகிறார்.சமையல், குறிப்புகள், பூஜைகள் என அவருடைய ஸ்டைல் கலக்குகிறார்.

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Preethi sanjeev keerthy suresh preethi sanjeev marriage preethi sanjeev instagram

Next Story
சப்பாத்தி, பூரிக்கு சூப்பரான சைட் டிஷ்: கொண்டைக்கடலை குருமா!pachadi recipes mangai pachadi recipe
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
X