திருமணம் சீரியல் பழைய அனிதாவோட வயச கேட்டா நம்ப மாட்டீங்க!

Preethi Sharma: டிக் டாக்கில் செம ஆக்டிவ்வாக இருக்கும் ப்ரீத்தி, அங்கு தனக்கென ஓர் ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார்.

Thirumanam serial anitha
Thirumanam serial anitha

Serial news in tamil : கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் கடந்த வருடம் முதல் ’திருமணம்’ சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. கன்னடத்தில் பெரும் வரவேற்பைப் பெற்ற, அக்னிசாட்சி என்ற சீரியலின் தமிழ் ரீமேக்கான இதற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

Thirumanam serial anitha
ப்ரீத்தி ஷர்மா

திருமணம் சீரியலில் கதாநாயகிக்கு தங்கையாக அனிதா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் ப்ரீத்தி ஷர்மா. தற்போது அவர் சீரியல் இருந்து விலகியுள்ளார். அவரது கதாபாத்திரத்திற்கு வேறொருவர் மாற்றப்பட்டுள்ளார். அனிதா – நவீன் என்ற அந்த ஜோடிக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது. சீரியலும் நன்றாக போய்க்கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில் ப்ரீத்தி சீரியலில் இருந்து விலகியது அவருடைய ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. வேறு ஒரு சீரியலில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிப்பதாஅல், தேதிகள் ஒதுக்க முடியவில்லை, அதனால் தான் திருமணம் சீரியலை விட்டு விலகியதாக வீடியோ ஒன்றையும் வெளியிட்டிருந்தார் ப்ரீத்தி ஷர்மா.

இந்நிலையில் சன் டிவியில் ஒளிபரப்பாகவிருக்கும் நடிகை ராதிகாவின் ’சித்தி 2’ என்ற சீரியலில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறாராம் ப்ரீத்தி. 19 வயதாகும் இவர், காலேஜ் இரண்டாமாண்டு படித்து வருகிறார். இவர் அடிப்படையில் வட இந்தியப் பெண். சொந்த ஊர் லக்னோ. ஆனால் ப்ரீத்தியின் குடும்பம் கோயம்புத்தூரில் செட்டில் ஆகியிருக்கிறது. அப்பா, அம்மா, 2 தம்பிகள் என மகிழ்ச்சியாக இருக்கும் ப்ரீத்திக்கு வீட்டில் பயங்கர சப்போர்ட்டாம்.

Thirumanam serial anitha, preethi sharma
திருமணம் சீரியலின் அனிதா – நவீன் ஜோடி

தவிர, டிக் டாக்கில் செம ஆக்டிவ்வாக இருக்கும் ப்ரீத்தி, அங்கு தனக்கென ஓர் ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார். பாடுவதில் மிகுந்த ஆர்வம் மிகுந்த ப்ரீத்தி, அதில் தான் தனது கரியர் இருக்க வேண்டும் என நினைத்தாராம். இப்போது அவரே எதிர்பார்க்காத வகையில், நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருப்பதை நினைத்து பூரிப்படைகிறார்.

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Preethi sharma thirumanam serial chithi 2 sun tv

Next Story
பார்வையாளர்களையும் செய்யத் தூண்டும் கரீனா கபூரின் சூரிய நமஸ்கார பயிற்சி!Kareena Kapoor fitness
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com