சமூக ஊடகங்கள் சுவாரஸ்யமான கதைகளால் நிரம்பியுள்ளன. அப்படி ஃபிட்னஸ் இன்ஃப்ளூயன்சர் ராதிகாவின் இரண்டாவது கர்ப்பத்தின் சுவாரஸ்யமான அம்சத்தை விவரிக்கும் இன்ஸ்டாகிராம் பதிவை நாங்கள் பார்த்தோம்.
’ஆம், நான் புஷ் பண்ணாமலேயே பிரசவித்தேன். நான் சும்மா சொல்லவில்லை! முதல் குழந்தைக்கு நான் 6 மணிநேரம் செலவிட்டேன். இரண்டாவது குழந்தைக்கு ஒரு நொடி கூட இல்லை. குழந்தை புஷ் பண்ணாமல் வெளியே வரும்போது, அது பெரும்பாலும் கரு வெளியேற்ற ரிஃப்ளெக்ஸ் (fetal ejection reflex) காரணமாகும். தாயின் உடலும் சுற்றுச்சூழலும் சுக பிரசவத்துக்கு உகந்ததாக இருக்கும் போது குழந்தையின் இந்த தன்னிச்சையான வெளியேற்றம் நிகழலாம்’, என்று ராதிகா கூறினார்.
ராதிகா சுகபிரசவத்திற்குத் தயாராவதற்கு என்ன உதவியது என்பதைப் புரிந்துகொள்வதற்கு முன், FER (fetal ejection reflex) பற்றி மேலும் அறிந்து கொள்வோம்.
சில பெண்கள் புஷ் பண்ணாமல் பிரசவிக்கலாம் என்கிறார் டாக்டர் பிரியங்கா சுஹாக் (consultant, dept of obstetrics and gynaecology at the CK Birla Hospital (R), Delhi).
தன்னிச்சையான பிறப்பு (passive descent or spontaneous birth) என்று அழைக்கப்படும் இந்த இயற்கையான செயல்முறை, கருப்பைச் சுருக்கங்கள் மற்றும் குழந்தையின் பொசிஷன் ஆகியவற்றின் சக்தி வாய்ந்த கலவையை நம்பியுள்ளது, இது பிறப்பு கால்வாயில் (birth canal) குழந்தையை மெதுவாக வழிநடத்துகிறது.
பெரும்பாலும் அடுத்தடுத்த கர்ப்பங்களில் அல்லது தாய் ஆழ்ந்த நிதானமாக இருக்கும்போது, குழந்தை பிரசவத்திற்கு சரியான பொசிஷனில் இருக்கும்போது தன்னிச்சையான பிறப்பு நிகழ்கிறது.
சுருக்கங்களின் போது (contractions), தாயின் உடல் உள்ளுணர்வு குழந்தையின் அசைவுகளுடன் செயல்படுகிறது, இது புஷ் பண்ணாமல் தன்னிச்சையான பிரசவத்தை அனுமதிக்கிறது.
இருப்பினும், ஒவ்வொரு பிரசவமும் தனித்துவமானது என்பதை நினைவில் கொள்வது அவசியம். சில பெண்கள் தன்னிச்சையான பிறப்பை அனுபவிக்கும் போது, மற்றவர்கள் சுறுசுறுப்பாக புஷ் செய்வதை மிகவும் வசதியாக அல்லது அவசியமாகக் காணலாம். பிரசவ விருப்பங்களை மருத்துவரிடம் விவாதிப்பது மற்றும் மிகவும் இயற்கையான அணுகுமுறையைத் தேர்ந்தெடுப்பது முக்கியமானது, என்று டாக்டர் சுஹாக் கூறினார்.
தன்னிச்சையான பிரசவத்துக்கு ராதிகா தனது உடலை எவ்வாறு தயார்படுத்தினார்?
/indian-express-tamil/media/media_files/0k86Zb4n2jNzeYGuumDg.jpg)
பிரசவத்தின்போது ஆக்டிவ் ஆக இருந்தார். நடப்பது, அசைவது மற்றும் ஆடுவது பிரசவ முன்னேற்றத்திற்கு உதவுவதோடு, குழந்தை பிறப்பு கால்வாயில் நகர்வதை எளிதாக்குகிறது.
உங்கள் இடுப்பு தசைகளை வலுப்படுத்தவும் தயார் செய்யவும் கர்ப்ப காலத்தில் பெல்விக் ஃப்ளோர் எக்சர்சைஸ் தவறாமல் பயிற்சி செய்யுங்கள்
ஆழ்ந்த சுவாசம் (deep breathing, visualisation, மற்றும் mindfulness) போன்ற தளர்வு நுட்பங்களைப் பயிற்சி செய்தார்.
பெரும்பாலும், உடல் தயாராக இருக்கும் போது FER ஏற்படுகிறது. செயல்முறையைக் கட்டுப்படுத்தவோ அல்லது கட்டாயப்படுத்தவோ முயற்சிக்காதீர்கள்.
நீரேற்றம் மற்றும் ஊட்டத்துடன் இருங்கள், என்று ராதிகா கூறினார்.
Read in English: Fitness influencer says she delivered child without ‘actively pushing’ during labour; we understand how that can be possible
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“