கர்ப்ப காலத்தில் இப்படி இருந்தா டெலிவரி ஈஸி! மலைகா அரோரா தரும் சூப்பர் டிப்ஸ்

கர்ப்ப காலத்தில் 'இரண்டு பேருக்காக சாப்பிட வேண்டும்' என்பது ஒரு கட்டுக்கதை,. நிறைய சாப்பிட வேண்டும் என்று நான் ஒருபோதும் நினைக்கவில்லை. எனக்குப் பிடித்ததை மட்டும் அளவாகச் சாப்பிட்டேன்.

கர்ப்ப காலத்தில் 'இரண்டு பேருக்காக சாப்பிட வேண்டும்' என்பது ஒரு கட்டுக்கதை,. நிறைய சாப்பிட வேண்டும் என்று நான் ஒருபோதும் நினைக்கவில்லை. எனக்குப் பிடித்ததை மட்டும் அளவாகச் சாப்பிட்டேன்.

author-image
WebDesk
New Update
Malaika Arora

Malaika Arora

பிரசவம் என்பது பெண்களுக்கு மறுபிறப்பு போன்ற ஒரு அனுபவம். கர்ப்பகாலத்தில் பெண்கள் தங்கள் உணவு, உடற்பயிற்சி, ஓய்வு ஆகியவற்றில் கூடுதல் கவனம் செலுத்துவார்கள். ஆனால், பலருக்கும் ஒரு சந்தேகம் இருக்கும், "கர்ப்ப காலத்தில் உடற்பயிற்சி செய்யலாமா?" இந்த கேள்விக்கு நடிகை மாலிகா அரோராவின் அனுபவமும், நிபுணர்களின் கருத்தும் ஒரு தெளிவான பதிலை அளிக்கிறது.

Advertisment


" 2002-ஆம் ஆண்டு தனது மகன் அர்ஹான் கான் சுமந்த போது ஒன்பது மாதங்களும் சுறுசுறுப்பாக இருந்தேன். கர்ப்ப காலத்தில் 'இரண்டு பேருக்காக சாப்பிட வேண்டும்' என்பது ஒரு கட்டுக்கதை,. நிறைய சாப்பிட வேண்டும் என்று நான் ஒருபோதும் நினைக்கவில்லை. எனக்குப் பிடித்ததை மட்டும் அளவாகச் சாப்பிட்டேன். கர்ப்பகாலம் முழுவதும் நான் மிகவும் சுறுசுறுப்பாக இருந்தேன். சாதரணமாக நடப்பது, யோகா செய்வது, நீச்சல் போன்ற பயிற்சிகளை நான் தொடர்ந்து செய்தேன். என்னால் முடிந்த அளவுக்கு உடற்பயிற்சி செய்தேன். இது என்னை மனதளவிலும், உடலளவிலும் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவியது. இதன் காரணமாக உடல் எடை அதிகமாகவில்லை, சரியான எடையுடன்” இருந்ததாகவும் கூறுகிறார் மலாய்கா.

கர்ப்ப காலத்தில் சுறுசுறுப்பாக இருப்பது எப்படி உதவும்?

டெல்லியில் உள்ள சிகே பிர்லா மருத்துவமனையின் மகப்பேறு மற்றும் மகளிர் மருத்துவத் துறையின் தலைமை ஆலோசகர் டாக்டர் மஞ்சுஷா கோயல், கர்ப்ப காலத்தில் சுறுசுறுப்பாக இருப்பது ஒரு தாயின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு மிகவும் உதவும் என்று கூறினார். 

“கர்ப்ப காலத்தில் வழக்கமான உடல் செயல்பாடுகள் ஆரோக்கியமான எடையைப் பராமரிக்க உதவுகிறது, இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது, தசைகளை பலப்படுத்துகிறது, சகிப்புத்தன்மையை அதிகரிக்கிறது. இந்த நன்மைகள் பிரசவ செயல்முறைக்கு உதவுகின்றன. மேலும் உடல் பிரசவத்தின் உடல் தேவைகளை சமாளிக்க சிறப்பாக உதவுவதால் பிரசவத்திற்குப் பிந்தைய மீட்பும் வேகமடையும்.

Advertisment
Advertisements

Pregnancy



கர்ப்ப காலத்தில் உடற்பயிற்சி செய்வது முதுகுவலியைக் குறைக்கிறது, தோரணை மற்றும் பிரசவத்திற்குப் பின் சிறுநீர்ப்பை கட்டுப்பாடு ஆகியவற்றிற்கு உதவுகிறது. “சுறுசுறுப்பாக இருக்கும் தாய்மார்கள் சோர்வு, மன அழுத்தம் மற்றும் பதட்டம் ஆகியவற்றைக் குறைப்பதோடு நல்ல தூக்கத்தையும் அனுபவிக்கின்றனர். இது பிரசவத்திற்குப் பிந்தைய காலத்தில் மன நலனை மேம்படுத்த உதவுகிறது.

மிக முக்கியமாக, கர்ப்ப காலத்தில் சுறுசுறுப்பாக இருப்பது, கர்ப்பகால நீரிழிவு நோய் மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்ற ஆபத்துகளைக் குறைக்கிறது. “இது உடலை விரைவாக மீண்டும் கர்ப்பத்திற்கு முந்தைய உடற்தகுதி நிலைகளுக்குத் திரும்ப உதவுகிறது மற்றும் நீண்டகால ஆரோக்கியத்தை ஆதரிக்கிறது” என்று டாக்டர் கோயல் குறிப்பிட்டார்.

பிரசவ முறை எதுவாக இருந்தாலும், ஒவ்வொரு தாயும் தனது சுகாதார நிபுணரின் ஆலோசனையின்படி, வலிமையை பாதுகாப்பாகவும் திறம்படவும் மீட்டெடுக்க வழிகாட்டப்பட்ட பயிற்சிகளைத் தொடர்ந்து செய்ய வேண்டும். கர்ப்பம் என்பது வளரும் குழந்தையை வளர்ப்பதோடு மட்டுமல்லாமல், பிரசவத்திற்குப் பிந்தைய பயணத்திற்கான வலிமை, பின்னடைவு மற்றும் ஆற்றலுடன் தாய்க்கு உதவுகிறது, என்று டாக்டர் கோயல் கூறினார்.

இந்த செய்தியை ஆங்கிலத்தில் வாசிக்க இந்த இணைப்பை கிளிக் செய்யவும். 

Lifestyle

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: