கர்ப்பம் ஒரு பெண்ணின் வாழ்க்கையில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்துகிறது. இது நிச்சயமாக மகிழ்ச்சியான தருணங்களைக் கொண்டுவரும் அதே வேளையில், ஒரு சில சிக்கல்களுடன் சேர்ந்து தாய்க்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும்.
இத்தகைய பொதுவான நிகழ்வுகளில் ஒன்று வயிற்றில் அரிப்பு ஏற்படுவது.
ஆனால் சில பயனுள்ள குறிப்புகள் மூலம் இதிலிருந்து விடுபடலாம் என்கின்றனர் வல்லுநர்கள்.
இது ஏன் ஏற்படுகிறது?
மகப்பேறு மருத்துவர் பிரதிமா தம்கே (consultant obstetrician and gynaecologist, Motherhood Hospital, Kharghar) கூறுகையில், தோல் நீட்சி மற்றும் ஹார்மோன் மாற்றங்கள் காரணமாக அடிக்கடி தொப்பை அரிப்பு ஏற்படுகிறது.
நீரேற்றத்துடன் இருப்பது உங்கள் சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருக்க உதவுகிறது. நறுமணம் இல்லாத, ஹைபோஅலர்ஜெனிக் மாய்ஸ்சரைசரை தொடர்ந்து தடவலாம்.
டாக்டர் தம்கே சில பயனுள்ள குறிப்புகளைப் பகிர்ந்து கொண்டார்.
இயற்கையான இழைகளால் செய்யப்பட்ட தளர்வான, சுவாசிக்கக்கூடிய ஆடைகளை அணிவது எரிச்சலைக் குறைக்கும். சூடான குளியலை தவிர்க்கவும், ஏனெனில் அவை உங்கள் சருமத்தை உலர்த்தும். லேசான, வாசனையற்ற சோப்பைப் பயன்படுத்தவும், குளித்த பிறகு உங்கள் சருமத்தை மெதுவாக உலர்த்தவும்.
கார்டிகோஸ்டீராய்டு கிரீம்கள் (corticosteroid) அரிப்பைக் குறைக்க உதவும், ஆனால் கர்ப்ப காலத்தில் எந்த மருந்தையும் பயன்படுத்துவதற்கு முன்பு உங்கள் மருத்துவரை அணுகவும்.
உங்கள் உணவில் கவனமாக இருங்கள், சில உணவுகள் அரிப்புகளை அதிகரிக்கக்கூடும். வைட்டமின்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஒரு சீரான உணவு தோல் ஆரோக்கியத்தை ஆதரிக்கிறது.
உணவுப் பரிந்துரைகளுக்கு உங்கள் சுகாதார நிபுணரை அணுகவும், என்று டாக்டர் தம்கே கூறினார்.
அரிப்பு கடுமையாக இருந்தால், தொடர்ந்தால் அல்லது சொறி போன்ற பிற அறிகுறிகளுடன் இருந்தால், மருத்துவரை அணுகுவது அவசியம். இவை கர்ப்பகால கொலஸ்டாசிஸ் (cholestasis of pregnancy) போன்ற மிகவும் தீவிரமான நிலையின் அறிகுறிகளாக இருக்கலாம், என்று டாக்டர் தம்கே கூறினார்.
மனதில் கொள்ள வேண்டியவை
ஒவ்வொரு கர்ப்பமும் தனித்துவமானது, தாய் மற்றும் குழந்தைக்கு சிறந்த பராமரிப்பை உறுதி செய்வதற்காக, சுகாதார நிபுணரிடம் உங்கள் பிரச்னைகளை தெரிவிக்க வேண்டியது அவசியம் என்று நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“