கோவிட்-19 பெருந் தொற்று அனைவரின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தியது. உடல் பருமன் மற்றும் வகை 2 நீரிழிவு நோய்களின் அதிகரிப்புக்கு வழிவகுத்தது.
இதற்கு ஒரே இடத்தில் உட்கார்ந்த வாழ்க்கை முறை, உணவுப் பழக்கவழக்கங்களில் மாற்றம் போன்றவை பெரும் தாக்கமாக பார்க்கப்படுகிறது.
முன்கூட்டியே பருவம் அடையும் பெண்கள்
இது குழந்தைகளையும் விடவில்லை. குறிப்பாக சிறுமிகளிடையே 'முன்கூட்டிய பருவமடைதல்' விகிதம் அதிகரித்துள்ளது.
இது குறித்து, ஃபோர்டிஸ் மருத்துவமனையின் நீரிழிவு மற்றும் நாளமில்லா சுரப்பியின் ஆலோசகர் டாக்டர் ஸ்வேதா புட்யால் கூறுகையில், “பெண்கள் மற்றும் சிறுவர்களில் பருவமடைவதற்கான சராசரி வயது 9 முதல் 12 ஆண்டுகள் ஆகும். ஆண் குழந்தைகளில் ஒன்பது வயதுக்கு முன்னரும், பெண் குழந்தைகளில் எட்டு வயதுக்குக் கீழும் பருவமடைதல் எனில், அது 'முன்கூட்டிய பருவமடைதல்' என்று கருதப்படுகிறது.
கோவிட்-19 லாக்டவுன், குழந்தைகள் வீட்டில் இருப்பதை உறுதி செய்ததிலிருந்து, முன்கூட்டிய பருவமடைதல் நிகழ்வு குறிப்பாக சிறுமிகளில் அதிகரித்துள்ளது.
கோவிட்-19க்கு முந்தைய பருவத்தில் பருவமடையும் இளம் பெண்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும் போது, கடந்த 1.5 ஆண்டுகளில் முன்கூட்டிய பருவமடையும் சிறுமிகளின் எண்ணிக்கையில் மிகப்பெரிய அதிகரிப்பு உள்ளது.
சிறுமிகளுக்கு பருவமடைவதற்கு ஐந்து நிலைகள் உள்ளன; பெண்களில் பருவமடைவதற்கான ஆரம்ப அறிகுறி மார்பக மொட்டு வளர்ச்சி, அதைத் தொடர்ந்து உடல் வளர்ச்சி, அந்தரங்க மற்றும் முடி வளர்ச்சி; கடைசி கட்டம் மாதவிடாய் ஆரம்பம் ஆகும்.
பிரச்னைகள்
பொதுவாக முன்கூட்டியே பருவமடையும் பெண்களிடம் மாதவிடாய் வருவதற்கான பயம், பதட்டம் காணப்படும். முன்கூட்டிய வளர்ச்சியின் காரணமாக, இந்த பெண்கள் ஆரம்பத்தில் உயரமாகத் தோன்றுகிறார்கள்.
இருப்பினும், பருவமடைதல் மற்றும் முன்னேற்றத்தின் வேகத்தைப் பொறுத்து அவர்களின் உயரம் 15-20 செ.மீ வரை குறைக்கப்படலாம்.
முன்கூட்டிய பருவமடைதல் உடல் பருமன் மற்றும் பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் (பிசிஓஎஸ்) போன்ற பிற உடல்நலப் பிரச்சினைகளின் வளர்ச்சிக்கும் வழிவகுக்கும்.
தீர்வுகள்
முன்கூட்டிய பருவமடைதல் சிக்கலான நாளமில்லா பிரச்சனையின் விளைவாக இருக்கலாம். எனவே முன்கூட்டிய பருவமடையும் அனைத்து பெண்களும் ஒரு நாளமில்லாச் சுரப்பி நிபுணரால் முறையான மதிப்பீடு செய்ய வேண்டும்.
மாதவிடாயின் தொடக்கத்தைத் தாமதப்படுத்த சில மருந்துகளின் மூலம் இந்த நிலையைப் பாதுகாப்பாகவும் திறம்படவும் குணப்படுத்த முடியும். குழந்தை சரியான வயதை அடையும் வரை பருவமடைவதை தாமதப்படுத்தலாம்.
மேலும், பருவமடையும் போது ஏற்படும் உடல் மாற்றங்களை ஆரம்ப கட்டத்திலேயே புரிந்துகொள்வது அவசியம், இதனால் சரியான நேரத்தில் மருத்துவ உதவியை நாட முடியும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.