நம் வீட்டில் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களை பட்டியலிட்டால் அதில் பிரஷர் குக்கர் முதன்மையான இடத்தை பெறும். அந்த அளவிற்கு கிச்சனில் பிரஷர் குக்கரின் பயன்பாடு அதிகமாக இருக்கும். சாதம் வடிப்பதில் தொடங்கி குழம்பு வைப்பது வரை பல்வேறு வேலைகளுக்கு பிரஷர் குக்கர் உபயோகமாக இருக்கும்.
Advertisment
ஆனால், நம்முடைய பணியை எளிமையாக்கும் பிரஷர் குக்கரும் சில சமயங்களில் டென்ஷனை ஏற்படுத்தும். குறிப்பாக, பிரஷர் குக்கரில் இருக்கும் விசில் சில சமயங்களில் சரியாக வேலை செய்யாமல் இருக்கும்.
இது போன்ற சூழலில் புதிய விசில் வாங்க வேண்டும் என்று பலரும் நினைப்பார்கள். ஆனால், வெறும் ரூ. 5 செலவு செய்தாலே போதுமானது. இதற்கான சிம்பிள் டிப்ஸை இந்தக் குறிப்பில் பார்க்கலாம்.
குக்கர் விசிலில் இருக்கும் வளையம் போன்ற பகுதியை, கத்தியை பயன்படுத்தி வெளியே எடுத்துக் கொள்ள வேண்டும். இதனை வெளியே எடுத்த பின்னர், அதனுள் சிறியதாக இரண்டு போல்டுகள் இருக்கும். இந்த போல்டை கடைகளில் இருந்து வாங்கிக் கொள்ளலாம். இதன் விலையும் ரூ. 5 மட்டும் தான் இருக்கும்.
Advertisment
Advertisements
அதன்படி, இந்த போல்டை புதிதாக வாங்கி மாற்றினால் விசில் சரியாக வேலை செய்யும். மேலும், அதில் இருந்து அதிகமாக தண்ணீர் வெளியேறுவதும் கட்டுப்படுத்தப்படும்.