/indian-express-tamil/media/media_files/2025/04/07/6EqHk79rI0x3fGMgB5Et.jpg)
கோடை காலம் வரும் போது அதன் வெப்பம் மற்றும் ஈரப்பதமான தன்மைக்கு கரையான்களின் தொல்லை வீட்டில் எட்டிப் பார்க்கத் தொடங்கும். இத்தகைய கரையான்களை எப்படி அகற்றுவது என்று நிறைய முறை இணையத்தில் தேடி இருப்போம். அந்த வகையில் ஈசியாக கரையான்களை அகற்றுவதற்கு சில டிப்ஸ்களை தற்போது பார்க்கலாம்.
ஆங்கிலத்தில் படிக்கவும்: Ways to prevent and treat termite (deemak) infestation at your home this summer
கரையான்களை விரட்டும் திரவம்:
இந்த முறை மிகவும் வீரியமாக இருக்கும். கரையான்களை விரட்டுவதற்காக கடைகளில் இருந்து பிரத்தியேகமான திரவங்களை வாங்கி பயன்படுத்தலாம். இவற்றை வீட்டைச் சுற்றி இருக்கும் மண், செங்கல், ஸ்லாப்கள் போன்றவற்றில் தெளிக்க வேண்டும். இப்படி செய்யும் போது வீட்டின் சுற்றுப் பகுதி பாதுகாக்கப்படும்.
இயற்கையான வழிமுறை:
ஆனால், இதனை விரும்பாமல் சுற்றுச் சூழலுக்கு பாதிப்பு அளிக்காத வகையில் செயலாற்ற விரும்புபவர்கள், தங்கள் வீட்டிலேயே மருந்துகளை தயாரித்துக் கொள்ள முடியும். இதற்கான வழிமுறைகள் சுலபமானதாக இருக்கும்.
வினிகர் மற்றும் தண்ணீர்:
நம் வீட்டில் சாதாரணமாக பயன்படுத்தும் வினிகர் மற்றும் தண்ணீரைக் கொண்டு கரையான்களை அகற்ற முடியும். அதன்படி, ஒரு ஸ்ரே பாட்டிலில் வினிகர் மற்றும் தண்ணீரை சம அளவில் எடுத்துக் கொள்ள வேண்டும். இதனை கரையான் இருக்கும் பகுதிகளில் தெளிக்கலாம். குறிப்பாக, மரப்பகுதிகளில் இது வீரியமாக செயலாற்றும்.
போராக்ஸ் பயன்பாடு:
இதேபோல், போராக்ஸ் பொடியை கொண்டு கரையான்களை விரட்ட முடியும். அதன்படி, ஒரு ஸ்பூன் போராக்ஸ் பொடியை 250 மில்லி லிட்டர் வெதுவதுப்பான தண்ணீரில் கலக்க வேண்டும். இதனை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் அடைத்து, கரையான்கள் இருக்கும் இடத்தில் தெளிக்கலாம். இதனை செய்யும் போது முகத்தில் மாஸ்க் அணிந்து கொள்ள வேண்டும். ஏனெனில், போராக்ஸில் இருந்து நச்சு வாயு வெளியேறக் கூடும்.
சூரிய ஒளி:
கரையான்கள் இருக்கும் மரப் பொருட்களை குறைந்தது மூன்று நாட்களுக்கு சூரிய ஒளியில் வைக்க வேண்டும். இப்படி செய்யும் போது அதில் இருக்கும் கரையான்கள் அனைத்தும் அழிந்து விடும்.
தடுப்பு நடவடிக்கைகள்:
இவை அனைத்தையும் கரையான்கள் பாதிப்பு ஏற்படும் போது செய்ய வேண்டும். எனினும், கரையான்கள் வருவதை தடுப்பதற்கு சில வழிகள் உள்ளன. அதன்படி, வீட்டில் இருக்கும் மரப் பொருட்களில் ஈரப்பதம் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஏனெனில், ஈரப்பதம் இருக்கும் போது கரையான்கள் எளிதாக வரும். எனவே, இவற்றை சுத்தமாக துடைக்க வேண்டும். இது தவிர ஏதாவது பூச்சிகள் அல்லது கரையான்கள் இருக்கின்றதா என்று அடிக்கடி சோதனை செய்து கொள்வது சிக்கலை தடுக்க உதவும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.