Advertisment

ரயில்வேயில் ஆகப் பெரிய அதிரடி: தடதடக்கும் தனியார் ரயில்கள், ‘வெயிட்டிங் லிஸ்ட்’-க்கு குட் பை!

Indian Railways Private Trains: பயணிகளின் பயண நேரத்தையும் குறைக்கும். ஒரு மணி நேரத்தில் 160 கிலோமீட்டர் வேகத்தை எட்டும் திறன் இந்த ரயில்களில் இருக்கும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
ரயில்வேயில் ஆகப் பெரிய அதிரடி: தடதடக்கும் தனியார் ரயில்கள், ‘வெயிட்டிங் லிஸ்ட்’-க்கு குட் பை!

private trains, railway private trains, corporate train in india, irctc private trains, தனியார் ரயில்கள், இந்தியன் ரயில்வே

Private train news in tamil: விரைவில் உறுதி செய்யப்பட்ட ரயில் பயணச்சீட்டுக்கள் மட்டும் தான். காத்திருப்போர் பட்டியலில் உள்ள பயணச்சீட்டுகளுக்கு விடை கொடுத்து விடலாம். ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் தலைமையிலான இந்திய ரயில்வே பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டத்தில் வேலை செய்து வருகிறது.

Advertisment

இந்த திட்டத்தின்படி, அதிக தேவை உள்ள ரயில் வழித்தடங்களில் காத்திருப்போர் பட்டியலில் உள்ள ரயில் பயணச்சீட்டுக்களின் தேவை நீக்கப்படும். தேசிய போக்குவரத்தான இந்திய ரயில்வே முக்கியமான ரயில்வே வழித்தடங்களில் தனியார் ரயில்களை அறிமுகப்படுத்துவதன் மூலம் இதை செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளனர்.

publive-image

Indian railways private trains: ஒரு மணி நேரத்தில் 160 கிலோமீட்டர்

ரூபாய் 30,000 கோடி செலவில் 109 ஜோடி வழித்தடங்களுக்கு தனியார் ரயில்கள் திட்டத்திற்கு Request for Qualifications (RFQs) கோருவதன் மூலம் இந்த திட்டத்துக்கான பணிகளை ஏற்கனவே இந்திய ரயில்வே தொடங்கிவிட்டது.

அனைத்து முக்கியமான, அதிக தேவையுள்ள வழித்தடங்களில் அனைத்து பயணிகளுக்கும் உறுதி செய்யப்பட்ட பயணச்சீட்டை எங்களால் வழங்க முடியும் என்பதுதான் தனியார் ரயில்களுக்கான யோசனை, என்கிறார் ரயில்வே வாரியத்தின் (Railway Board) தலைவர் (Chairman) VK Yadav.

109 ஜோடி வழித்தடங்களும் 12 clusters களாக இந்திய ரயில்வேயால் பிரிக்கப்பட்டுள்ளது. ஒரு குறிப்பிட்ட cluster க்காக ஒதுக்கப்பட்டுள்ள தனியார் நிறுவனம் தனது சொந்த ரயிலை இந்திய ரயில்வேயின் தரத்திற்கு ஏற்ப பயன்படுத்த வேண்டும். மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் உலகத்தரத்திற்கான சுமார் 150 நவீன ரயில்கள் தனியார் நிறுவனங்களால் அறிமுகப்படுத்தப்பட போகின்றன.

16 கோச்களுடன் கூடிய இந்த 150 ரயில்களில் பெரும்பாலானவை இந்தியாவில் தயாரிக்கப்படப் போகின்றன. இந்த ரயில்கள் பயணிகளின் அனுபவத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டிருப்பதோடு, பயணிகளின் பயண நேரத்தையும் குறைக்கும். ஒரு மணி நேரத்தில் 160 கிலோமீட்டர் வேகத்தை எட்டும் திறன் இந்த ரயில்களில் இருக்கும்.

முதல் தனியார் ரயில் ஏப்ரல் 2023 ல் இயக்கப்படும் என VK Yadav தெரிவித்தார். நிதி ஏலம் (financial bids) வரும் மாதங்களில் கோரப்பட்டு, ஒரு clusterக்கு ஒரு தனியார் நிறுவனம் ஒதுக்கப்பட்டு, அந்நிறுவனம் புதிய ரயில்களுக்கான வடிவமைப்புகளைப் பகிர்ந்து கொள்ளும். இந்த வடிவமைப்புகள் இந்திய ரயில்வே வழங்கிய விவரக்குறிப்புகளின்படி இருக்கும்.

வடிவமைப்புகள் அங்கீகரிக்கப்பட்டவுடன் தனியார் நிறுவனம் உலகத்தரம் வாய்ந்த ரயில் பெட்டிகள் மற்றும் இருக்கைகளை தயாரிக்கும். பெரும்பாலான நவீன ரயில்கள் இந்தியாவில் தயாரிக்கப்படும். ஒரு வேளை தனியார் நிறுவனம் வெளிநாட்டு உபகரணங்கள் உற்பத்தியாளராக இருந்தால் அவை இறக்குமதி செய்துக் கொள்ளலாம்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

 

Indian Railways Irctc
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment