Priya Bhavani Shankar Beauty Tips Skincare Secrets Tamil : செய்திகள் சேனல் பக்கம்கூட திரும்பாதவர்கள், பிரியா பவானிஷங்கரின் வாசிப்பிற்காக செய்திகளை பார்க்க ஆரம்பித்தனர். அந்த அளவிற்கு அவருடைய உடைகளிலிருந்து உச்சரிப்பு வரை அனைத்தும் பக்காவாக இருக்கும். இதனைத் தெடர்ந்து சின்னத்திரை தொடர்களில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து தற்போது வெள்ளித்திரையில் கலக்கிக்கொண்டிருக்கிறார். சமீபத்தில் அவர் பகிர்ந்துகொண்ட அழகு மற்றும் ஆரோக்கியம் பற்றிய பார்வை இங்கே..

“அழகு, சரும பராமரிப்பு மற்றும் ஃபிட்னெஸ் போன்றவற்றை நாம் அனைவரும் குழப்பிக்கொள்கிறோமோ என்கிற எண்ணம் எனக்கு வருகிறது. ஏனென்றால் ஒல்லியாக இருப்பதுதான் அழகு, ஆரோக்கியம் என்று பலர் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், அது அப்படியல்ல. இதுதான் அழகு என்று எந்த வரையறையும் இல்லை.

ஒல்லியாக வேண்டும் என்கிற எண்ணத்தில் உடற்பயிற்சி செய்வதில் எந்த பயனுமில்லை. நம்மை நாம் ஆரோக்கியமாக வைத்துக்கொள்வதுதான் முதன்மை நோக்கமாக இருக்கவேண்டும். அதற்காக மட்டுமே உடற்பயிற்சி செய்யவேண்டும். வாழ்கிற வரைக்கும் பிடித்ததை சாப்பிட்டு ஆரோக்கியமாக இருப்பதுதான் முக்கியம். இதுவே நமக்கு ஒருவிதமான நம்ம்பிக்கையை தரும். அதுதான் உண்மையான அழகு என்று நான் நினைக்கிறேன்.

அதேபோல முகத்தில் பருக்கள் இல்லாமல், கருவளையம் இல்லாமல், எந்தவித வடுக்கள் இல்லாமல் இருப்பதுதான் அழகு என்றால் முழுக்க முழுக்க தவறான புரிதல் அது. மேக்-அப் மட்டும்தான் வடுக்கள் அல்லாத அழகை கொடுக்கிறது. ஆனால், கருவளையம், பருக்கள்தான் இயற்கை அழகு. மனிதன் என்றால் இவையெல்லாம் இருக்கதான் செய்யும். நானும் மேக்-அப் அகற்றிவிட்டால் அது எல்லாம் எனக்கும் இருக்கும். முடிந்த அளவிற்கு ஆரோக்கியமான சருமத்திற்கு என்ன செய்ய முடியுமோ அதை செய்யுங்கள். உடலை சூடாக்காமல் குளிர்ந்த நிலையில் வைத்திருந்தாலே தேவையில்லாத பிரச்சனைகள் வராது. அதற்கு நிறைய தண்ணீர் குடிப்பது அவசியம்.

நான் புதுப்புது காஸ்மெட்டிக் பொருள்களை எல்லாம் முயற்சி செய்தது இல்லை. எனக்கு மிகவும் சென்சிடிவ் சருமம் என்பதால், மருத்துவரின் வழிகாட்டுதல் இல்லாமல் எதையும் முயற்சி செய்ய மாட்டேன். ஹோம் ரெமடிகளைகூட முயற்சி செய்ய மாட்டேன்”.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil