/tamil-ie/media/media_files/uploads/2021/02/Pbup.jpg)
Priya Bhavani Shankar latest Photoshoot
Priya Bhavani Shankar Latest Photoshoot Tamil News : செய்தி வாசிப்பாளராக தன் திரைப்பயணத்தைத் தொடங்கி தற்போது பல்வேறு திரைப்படங்களில் வித்தியாச முன்னணி கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வரும் பிரியா பவானிஷங்கரின் சமீபத்திய போட்டோஷூட் கியூட் ரகம்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய கல்யாணம் முதல் காதல் வரை சீரியல் மூலம் ஆண்களையும் சின்னதிரை முன்பு கட்டிப்போட்டவர் பிரியா பவானிஷங்கர். இதனைத் தொடர்ந்து, மேயாத மான், கடைக்குட்டி சிங்கம்,
மான்ஸ்டர் உள்ளிட்ட திரைப்படங்களில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்தார். ஜீவாவோடு 'களத்தில் சந்திப்போம்', ஹரிஷ் கல்யாணோடு 'ஓ மணப்பெண்ணே' உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வரும் பிரியா, நீண்ட நாள்களுக்குப் பிறகு போட்டோஷூட் செய்திருக்கிறார்.
அதிகப்படியான வேலைப்பாடுகள் எதுவுமில்லாமல், சிம்பிளான கேஷுவல் உடைகள்தான் பிரியாவின் சாய்ஸ். அந்த வரிசையில் கருப்பு நிற knee-length உடையில் மிகவும் மிடுக்கான தோற்றத்தில் போஸ் கொடுத்திருக்கிறார் பிரியா. இந்த அவுட்ஃபிட்டை மேலும் மெருகேற்ற அதிக அகலம் கொண்ட பெல்ட், பீட்ஸ் பதித்த ஜாக்கெட், கருப்பு காதணி என அத்தனையும் எளிமையான டிசைன். ஸ்டைலிஷ் தமிழச்சி எனப் பார்த்ததும் அளவிற்கு இருக்கிறது பிரியாவின் இந்த வித்தியாச லுக்.
அதேபோல வெள்ளை வண்ண சாதாரண முழுநீள டீ-ஷர்ட்டை பிங்க் மற்றும் ஆரஞ்சு வண்ண பாந்தினி டிசைன் ஸ்கர்ட் அணிந்து அதற்கு மேட்சாக சில்வர் டெம்பிள் நகைகளை அணிந்து வித்தியாச கெட் அப்பிலும் போட்டோஷூட் செய்திருக்கிறார் பிரியா. இவருடைய இந்த எளிமையான ஸ்டைலிஷ் போட்டோக்களுக்கு ஹார்ட்டின்களும் லைக்ஸ்களும் குவிந்துகொண்டே இருக்கின்றன.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.