உங்கள் உதடுகள் உங்கள் முகத்தில் மிகவும் புறக்கணிக்கப்பட்ட பகுதியாக இருக்கலாம், ஆனால் அவை மேக்கப் இல்லாமல் சிறப்பாக இருக்க நிலையான கவனிப்பும் ஊட்டச்சத்தும் தேவை.
Advertisment
இங்கு பிரியங்கா சோப்ரா உங்கள் உதடுகளுக்கு உடனடி நீரேற்றத்தை அளிக்கும் எளிதாக செய்யக்கூடிய ஹோம்மேட் லிப் ஸ்க்ரப்பைப் பகிர்ந்துள்ளார். இதற்கு உங்களுக்கு மூன்று பொருட்கள் மட்டுமே போதும்!
எப்படி செய்வது?
உங்கள் உதடுகளின் அளவைப் பொறுத்து சிறிது கடல் உப்பை எடுத்துக் கொள்ளுங்கள். 100 சதவீதம் சுத்தமான வெஜிடபிள் கிளிசரின் மற்றும் சிறிது ரோஸ் வாட்டரைச் சேர்க்கவும், எனவே நீங்கள் தடவும்போது மென்மையாக இருக்கும்.
அதை உங்கள் உதடுகளில் மெதுவாக தேய்த்து, பிறகு கழுவவும்.
கிளிசரின், ஈரப்பதத்தைத் தக்கவைத்து, உங்கள் சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருக்கும். எனவே இது நிச்சயமாக பயனுள்ளது.
லிப் ஸ்க்ரப் உங்களுக்கு நல்லதா?
லிப் ஸ்க்ரப் உங்கள் உதடுகளை நீரேற்றமாகவும், பிரகாசமாகவும் மாற்றும் அதே வேளையில், அதன் எஃபக்ட் தற்காலிகமாக இருக்கலாம், என்று தோல் மருத்துவர் கீதிகா மிட்டல் குப்தா கூறினார்.
கூடுதலாக வறண்ட உதடுகளில், அது ரத்தப்போக்குக்கு வழிவகுக்கும்.
உங்கள் உதடுகளை பிரகாசமாக்க மற்றும் அவற்றை நீரேற்றமாக வைத்திருக்க லிப் லைட் அல்லது லிப் பெர்க் (lip light or lip perk) சிகிச்சைகளை மேற்கொள்ள டாக்டர் குப்தா பரிந்துரைத்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“