/tamil-ie/media/media_files/uploads/2019/10/sachin-29.jpg)
priyanka chopra dressing
priyanka chopra dressing : கோலிவுட்டில் இதை நீங்கள் அதிகம் கேள்விப்பட்டு இருக்க மாட்டீங்க. ஆனா பாலிவுட்டில் அப்படி இல்லை. இது அடிக்கடி பேசப்படும் , கலாய்க்கப்படும் ஒரு விஷயம் தான். ஒரே மார்டன் உடைகள், காலணிகள், ஆண்ட் பேக்குகளை 2 கதாநாயகிகளும் பயன்படுத்தினால் உண்மையில் இது யாருக்கு பொருந்தியது, யாருக்கு நன்றாக இருக்கிறது என ரசிகர்கள் இணையத்தில் விவாதிப்பார்கள்.
சமூகவலைத்தளங்களில் இதுக் குறித்த பேச்சுகள், மீம்ஸ்கள், கருத்துக்கள் 1 வாரத்திற்கு அனல் கட்டி பறக்கும். அந்த வகையில் இப்போது புதியதாக எழுந்திருக்கும் பேச்சு தான் பூட்ஸ் யாருக்கு பொருத்தம். பிரியங்கா சோப்ராவுக்கா? இல்லை என்றும் இளமை ஷில்பா ஷெட்டிக்கா? என்பது தான். காரணம், இருவரும் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றிற்கு ஒரே மாதிரியான பூட்ஸ் காலணிகளை அணிந்து வந்தனர்.
ஷில்பா ஷெட்டிக்கு ட்ரெஸ்ஸிங் சென்ஸ் அதிகம் என்று சொல்லாம். ஏனென்றால் அவர் அந்த அளவில் உடைக்கு பொருத்தமாக மேக்கப் போடுவதில் அதிகம் கவனம் செலுத்தக் கூடியவர்.அதே போல் முன்னாள் உலக அழகி பட்டம் பெற்ற பிரியங்கா சோப்ரா ஆடை தேர்வில் அடிக்கடி சர்ச்சை மற்றும் கேலி கிண்டலுக்கு ஆளாகி இருக்கிறார். வித்யாசமான ஃபேஷன் என்ற பெயரில் அவர் அணிந்த சில ஆடைகளை நெட்டிசன்கள் பயங்கரமாக கலாய்த்து தள்ளி இருக்கின்றனர்.
சமீபநாட்களாக தனது காதல் கணவருடன் வெளிநாடுகளிலேயே சுற்றித்திரிந்து வரும் பிரியங்கா சோப்ரா, சில தினங்களுக்கு முன்பு கலந்துக் கொண்ட இசை நிகழ்ச்சி ஒன்றிற்கு மஞ்சள் நிற வடிவிலான பூட்ஸ் காலணியை அணிந்து வந்திருந்தார். அதே போல் ஷில்பா ஷெட்டியும் மஞ்சள் நிற பூட்ஸ் ஷூவை அணிந்து சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகின.
சொல்லி வைத்தது போலவே இருவரும் வெள்ளை நிற ஆடைகள். இதை வைத்து நெட்டிசன்கள் இப்போது புது விவாதத்தை எழுப்பியுள்ளனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.