நடிகை பிரியங்கா சோப்ரா, தனது 30 வயதின் முற்பகுதியில் தனது கருமுட்டைகளை உறைய வைத்ததைப் பற்றி சமீபத்திய போட்காஸ்ட் ஒன்றில் பகிர்ந்து கொண்டார்.
2022 ஆம் ஆண்டில் வாடகைத் தாய் மூலம் தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொண்ட பிரியங்கா, தனது தாய் மது சோப்ராவின் வற்புறுத்தலின் பேரில் தான் இந்த நடைமுறையைத் தேர்ந்தெடுத்தாக வெளிப்படுத்தினார்.
நான் அதை என் முப்பதுகளின் ஆரம்பத்தில் செய்தேன்; எனவே நான் ஒரு லட்சிய போர்ப்பாதையில் தொடர முடியும். நான் சாதிக்க விரும்பினேன், என் தொழில் வாழ்க்கையில் ஒரு குறிப்பிட்ட இடத்தைப் பெற விரும்பினேன், என்று பிரியங்கா கூறினார்.
மேலும், குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள விரும்பும் அளவுக்கு ஒரு நபரை நான் சந்திக்கவில்லை. எனவே, அந்த பதட்டம் தான், மகப்பேறு மருத்துவரான என் அம்மாவின் தூண்டுதலுடன், 30 வயதில் தனது கரு முட்டைகளை உறைய வைத்ததாக பிரியங்கா கூறினார்.
35 வயதிற்குப் பிறகு கர்ப்பமாக இருப்பது கடினம். என் அம்மா என்னிடம் இதைச் சொன்னாலும், நான் அதை எனக்காகவும் செய்தேன். உயிரியல் கடிகாரம் உண்மையானது என்று எனது இளைய நண்பர்கள் அனைவருக்கும் சொல்கிறேன்.
35 வயதிற்குப் பிறகு கர்ப்பம் தரிப்பது மிகவும் கடினமாகிறது. குறிப்பாக வாழ்நாள் முழுவதும் உழைக்கும் பெண்களுக்கு. ஆனால் விஞ்ஞானம் இப்போது ஒரு அற்புதமான இடத்தில் உள்ளது, நீங்கள் அதை வாங்க முடிந்தால், இது உங்களுக்கு நீங்களே கொடுக்கும் சிறந்த பரிசு. ஏனென்றால் நீங்கள் உங்கள் உயிரியல் கடிகாரத்தின் சக்தியை எடுத்துக்கொள்கிறீர்கள். நீங்கள் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் வேலை செய்யலாம், உங்கள் முட்டைகள் அது உறைய வைக்கும் வயதிலேயே இருக்கும்.
கருமுட்டை உறைதல் (egg freezing) என்றால் என்ன?
Oocyte Cryopreservation அல்லது கரு முட்டை உறைதல் என்பது ஒரு பெண்ணின் கரு முட்டைகளை பிரித்தெடுத்து, உறைய வைத்து, சேமிக்கும் செயல்முறையாகும் என்று கருவுறுதல் ஆலோசகர் நிஷா பன்சாரே கூறினார்.
“இது ஒரு பெண் தனது உயிரியல் கடிகாரத்தை நிறுத்தவும் மற்றும் அவள் கர்ப்பமாக இருக்க தயாராக இருக்கும் போது, எதிர்கால பயன்பாட்டிற்காக அவளது முட்டைகளை சேமித்து வைக்கவும் அனுமதிக்கிறது, என்று அவர் கூறினார்.
இந்த செயல்முறை என்ன?
நீங்கள் முடிவு செய்தவுடன், நீங்கள் சிகிச்சைக்கு பொருத்தமானவர் என்று கண்டறியப்பட்டால், உங்கள் கருப்பையில் இருந்து முட்டைகள் எடுக்கப்பட்டு பின்னர் உறைய வைக்கப்படும் என்று கருவுறுதல் ஆலோசகர் கரிஷ்மா டாஃப்லே கூறினார்.
இந்த முட்டைகள் பிறகு பயன்படுத்த சேமிக்கப்படும். செயல்முறையைத் தேர்வு செய்ய முடிவு செய்த பிறகு, நீங்கள் முழுமையாக கண்காணிக்கப்படுவீர்கள். முட்டை உறைவதற்கு முன், நோய்த்தொற்றுகள் அல்லது சிக்கல்களுக்கு வழிவகுக்கும் ஏதேனும் காரணிகளைக் கண்டறிய சில சோதனைகள் நடத்தப்படும்.
ஒரு படிப்படியான மதிப்பீட்டிற்குப் பிறகு, நீங்கள் பொருத்தமானவராக இருந்தால் மட்டுமே செயல்முறை தொடங்கப்படும். இந்த நடைமுறை மூன்று பகுதிகளாக மேற்கொள்ளப்படும் என்று கரிஷ்மா தெரிவித்தார்.
முதலில், ஒரு கருப்பை தூண்டுதல் (ovarian stimulation) செய்யப்படும், இதில் கருப்பையைத் தூண்டுவதற்கும், ஒரே ஒரு முட்டைக்கு பதிலாக பல முட்டைகளை உருவாக்குவதற்கும், செயற்கை ஹார்மோன்கள் பெண்ணுக்குள் செலுத்தப்படும்.
பின்னர், நிபுணர் ரத்த பரிசோதனைகள் மற்றும் வெஜினல் அல்ட்ராசவுண்ட் உதவியுடன் நுண்ணறைகளின் வளர்ச்சியை (முட்டைகள் முதிர்ச்சியடையும் திரவம் நிறைந்த பைகள்) பார்க்க வேண்டும். கருப்பையின் உள்ளே நுண்ணறைகள் உருவாக சிறிது நேரம் எடுக்கும்.
பின்னர், கருவுறாத முட்டைகள் மீட்டெடுக்கப்பட்டு, உறைந்திருக்கும், எதிர்காலத்தில் பெண் கர்ப்பம் தரிக்க விரும்பும் போதெல்லாம் இதைப் பயன்படுத்தலாம் என்று டாக்டர் டேஃபில் விளக்கினார்.
இது யாருக்கானது?
முப்பது வயதிற்குட்பட்ட திருமணம் ஆகாத பெண்கள், விரைவில் குடும்பம் நடத்த விரும்பாதவர்கள், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மற்றும் கீமோதெரபி/அறுவை சிகிச்சைக்கு உள்ளான பெண்கள், எண்டோமெட்ரியோசிஸ், ரத்த சோகை, பிசிஓஎஸ் மற்றும் காலப்போக்கில் முட்டை தரம் குறையக்கூடிய பிற நிலைமைகள் உள்ள பெண்களுக்கு இந்த செயல்முறை பயனுள்ளதாக இருக்கும்.
35 வயதுக்கு முன்பு ஏன் பரிந்துரைக்கப்படுகிறது?
ஏனென்றால், ஒரு பெண்ணுக்கு 35 வயது ஆனவுடன் முட்டைகளின் எண்ணிக்கையும் தரமும் வெகுவாகக் குறையும் என்று டாஃப்லே கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“