Priyanka Chopra long distance relationship Nick Jonas Tamil News : பிரியங்கா சோப்ரா பல விஷயங்களில் தைரியமாகக் குரல் கொடுப்பவராக இருக்கலாம் ஆனால், அவருடைய தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றியும் சமமாகவே பார்க்கிறார்.
39 வயதான பிரியங்கா சோப்ரா சமீபத்தில், இன்ஸ்டைலின் லேடீஸ் ஃபர்ஸ்ட் வித் லாரா பிரவுன் போட்காஸ்டில் தோன்றியபோது, அவரும் தன் கணவர் நிக் ஜோனாஸும் எவ்வாறு ஒருவருக்கொருவர் நேரத்தை செலவிடுகிறார்கள் என்பது பற்றிய விவரங்களைப் பகிர்ந்து கொண்டார்.
"நாங்கள் ஒருவருக்கொருவர் உணர்வுகளை அறிவோம். நாங்கள் செய்யும் எல்லா விஷயங்களிலும் ஒருவருக்கொருவர் முன்னுரிமை கொடுக்கிறோம். நாங்கள் தனிப்பட்ட வாழ்க்கையைப் பெற்றுள்ளோம், ஒருவருக்கொருவர் தொழில் வாழ்க்கையில் தலையிட மாட்டோம் என்பதில் நாங்கள் இருவரும் தெளிவாக இருக்கிறோம்” என்று சமீபத்தில் தி ஃபேஷன் விருதுகள் 2021-ல் தனது கணவருடன் தோன்றிய பிரியங்கா கூறினார்.
"நாங்கள் ஒருவருக்கொருவர் ஒவ்வொரு விஷயங்களிலும் தனிப்பட்ட கருத்தை வைத்திருப்போம். ஆனால் அந்த முடிவுகள் நாங்கள் இருவரும் எடுத்ததாக இருக்கும். ஏனென்றால், நாங்கள் நீண்ட காலமாக எங்கள் வாழ்க்கையை நாங்களே கட்டியெழுப்பியுள்ளோம்" என்று அவர் மேலும் கூறினார்.
தன்னுடன் இரவு உணவு அருந்துவதற்காகப் பயணம் செய்வது போன்ற இனிமையான செயல்களைச் செய்து தன்னை எப்போதும் நிக் ஆச்சரியப்படுத்துவார் என்பதையும் பகிர்ந்துகொண்டார் பிரியங்கா. இதுபோன்ற செயல்களே அவர்களின் பிணைப்பை வலுவாக வைத்திருக்கிறது என்று கூறினார்.
"அதே நேரத்தில், தன்னுடைய துணை எப்படி உணர்கிறார்கள் என்பதைக் கண்காணிப்பது மிகவும் முக்கியம் என்று நான் நினைக்கிறேன். என் கணவர் அதைச் செய்வதில் அற்புதமானவர். நான் சொன்னது போல், இந்த வருடம் லண்டனில் இருப்பது எனக்குக் கடினமாக இருந்தது. அவர் எல்லாவற்றையும் விட்டுவிடுவார். என்னுடன் இரவு உணவு சாப்பிட்டுவிட்டு திரும்பிப் பறந்து செல்வார். இது போன்ற விஷயங்கள் செய்து, நீங்கள் ஒருவருக்கொருவர் முன்னுரிமை கொடுக்க வேண்டும். இப்படி இருந்தாலே போதும். வாழ்க்கையில் எல்லாம் சரியாக இருக்கும்” என்று அவர் குறிப்பிட்டார்.
தொற்றுநோய்க்கு மத்தியில் குடும்பத்தை விட்டு விலகி இருப்பது எப்படி கடினமாக இருந்தது என்பதை பற்றியும் வெளிப்படுத்தியுள்ளார்.
"இந்த ஆண்டு உண்மையில் மிகவும் கடினமாக இருந்தது. ஒரு வருடம் முழுவதும் வீட்டை விட்டு வெளியே இருப்பது மிகவும் கடினமாக இருந்தது, குறிப்பாக உங்கள் குடும்பத்தைப் பார்க்க நீங்கள் பயணம் செய்ய முடியாத நேரத்தில் அது மிகவும் கடினம்”என்று கூறினார். “என் அம்மாவும் என் சகோதரனும் இந்தியாவில் இருப்பது நிச்சயமற்ற தன்மை. நான் இங்கிலாந்தில் இருந்தபோது என் கணவர் அமெரிக்காவில் இருப்பது மிகவும் நிச்சயமற்றதாக இருந்தது. பயணத்தில் ஏதாவது தவறு நடந்தால் என்ன செய்வது என்ற பதற்றம் இருந்தது. ஆனால், அதிர்ஷ்டவசமாக, உங்களுக்குத் தெரியும், எல்லோரும் நன்றாக இருக்கிறார்கள்” என்று அவர் பகிர்ந்து கொண்டார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil