scorecardresearch

உலக அழகி 2000-ன் போது ‘டெண்ட்ரில்’ ஹேர்ஸ்டைல் ஏன்? – சீக்ரெட் பகிர்ந்துகொள்ளும் பிரியங்கா சோப்ரா ஜோனஸ்

Priyanka Chopra unfinished miss world hairdo “அப்போது நான் என்னை சுட்டுக்கொண்டேன் மற்றும் தோல் வருடியது”

Priyanka chopra unfinished miss world hairdo Tamil News
Priyanka chopra unfinished miss world hairdo

Hairstyle Secret of Priyanka Chopra Tamil News : பிரியங்கா சோப்ரா ஜோனஸின் பல நினைவலைகள் தற்போது வேகமாகப் பரவி வருகிறது. மேலும் அதனை விளம்பரப்படுத்துவதில் பிரியங்கா மும்முரமாக ஈடுபட்டுள்ளார். சமீபத்தில், ‘தி டுநைட் ஷோ வித் ஜிம்மி ஃபாலனுடன்’ தோன்றினார். அப்போது ஓர் குறிப்பிட்ட சம்பவம் குறித்து நீண்ட நேரம் பேசியுள்ளார். 2000-ம் ஆண்டில் உலக அழகி மகுடத்தை வென்ற நடிகையின் புகைப்படங்கள் நீண்ட காலமாக பொதுவெளியில் பதிக்கப்பட்டிருக்கின்றன. அதில் அவருடைய ஹேர்ஸ்டைல்தான் ஹயிலைட். ஓர் சிறிய பகுதியை மட்டும் முகத்தின் முன்பு விட்டிருக்கும்படி இருக்கும் அந்த ஸ்டைலை டெண்ட்ரில் என அழைக்கப்படுகிறது.

நிகழ்ச்சியில் அவர் அதைப் பற்றி விரிவாகப் பேசியுள்ளார். “இந்த டெண்டரில்லை என் முகத்தின் கீழே வரை வைத்திருக்கிறேன். அந்த நேரத்தில், நான் அதை ஓர் சரியான தேர்வு என எண்ணி முயற்சி செய்தேன். ஆனால், அது உண்மையல்ல. நான் என் தலைமுடியைச் சுருட்டையாக மாற்ற முயன்றேன். திரைக்குப் பின்னால் 90 பெண்கள் இருந்தார்கள். எல்லோரும் சுற்றிக் கொண்டு பலருடைய தலைமுடியை சரிசெய்து மேக்கப் செய்து கொண்டிருந்தார்கள். நான் என் தலைமுடியை கர்ல் செய்ய முயன்றபோது, யாரோ ஒருவர் என்னை கேலி செய்தார். அப்போது நான் என்னை சுட்டுக்கொண்டேன் மற்றும் தோல் வருடியது” என பிரியங்கா கூறினார்.

ஆனால், அவருடைய மனதில் இருப்பு இருந்தது. அவர் விரைவாக வேறு நடவடிக்கைக்கு முயற்சி செய்துள்ளார். “இந்த பெரிய அடையாளத்தை கன்சீலர் கொண்டும் டெண்டிரில் கொண்டும் மறைக்க விரும்பினேன். ஒவ்வொரு முறையும் நான் அந்தப் படத்தைத் திரும்பிப் பார்க்கும்போது, டெண்டிரில் தேர்வில் நான் இப்படி இருக்கிறேனே என்று வியந்து பார்ப்பேன்” என தன் ஹேர்ஸ்டைல் பற்றிய சீக்ரெட்டை உடைத்தார்.

தன்னுடைய புத்தகத்தில், உலக அழகி கிரீடத்தை வென்றதில் அதிர்ச்சியடைந்ததையும், அதன் பின்னர் அவருடைய வாழ்க்கை மாறியதையும் பற்றி எழுதியிருக்கிறார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news download Indian Express Tamil App.

Web Title: Priyanka chopra unfinished miss world hairdo tamil news