வங்கதேசத்தில் உள்ள ரோஹிங்யா அகதிகள் முகாமிற்கு சென்ற நடிகை பிரியங்கா சோப்ரா மனம் உருகி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் கருத்து பலரையும் கண் கலங்க வைத்துள்ளது.
ஹாலிவுட்டில் மட்டுமில்லை பாலிவுட்டிலும் புகழ்பெற்ற கதாநாயகியாக வலம் வருபவர் தான் நடிகை பிரியங்கா சோப்ரா. சமீபத்தில் நடந்த பிரான்ஸ் இளவரசர் ஹாரி திருமணத்திற்கு நடிகை பிரியங்கா சோப்ராவும் அழைக்கப்பட்டிருந்தார். திருமணத்திற்கு பிரியங்கா சென்றிருந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது.
இந்நிலையில், பிரியங்கா சோப்ரா நேற்று(21.5.18) திடீரென்று வங்கதேசத்தில் உள்ள ரோஹிங்யா அகதிகள் முகாமிற்கு சென்றார். அங்கிருந்த குழந்தைகளை சந்தித்து அவர்களுடன் பேசி மகிழ்ந்தார்.
இவர்கள் அனைவரும், மியான்மர் வன்முறையால் அங்கிருந்து வெளியேறி வங்க தேசத்தில் தற்போது அகதிகளாக வாழ்ந்து வருகின்றனர். யுனிசெஃபின் தூதருமான பிரியங்கா சோப்ரா கடந்த 10 வருடங்களாக 10 வருடங்களாக சுற்றுசூழல் பாதுகாப்பு, சுகாதாரம் , கல்வி, பெண்கள் முன்னேற்றம் போன்ற விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறார்.
இதுக் குறித்து அவர் தெரிவித்துள்ளது, “ வங்கதேசத்தில் உள்ள ரோஹிங்யா அகதிகளின் குழந்தைகளை காப்பாற்ற வேண்டிய கடமை உலகுக்கு உண்டு. இப்போது அவர்கள் தங்கிருக்கும் குடியிருப்பின் நிலை மிகவும் மோசமாக உள்ளது. பருவமழை தொடங்கி விட்டால் குடியிருப்புகள் அனைத்தும் பாழாகிவிடும்.
இதுதான் உலகிலேயே மிகப் பெரிய அகதிகள் முகாம். 2017-ம் ஆண்டின் இறுதியில் மியான்மரில் நடந்த இனவெறி தாக்குதலின் புகைப்படங்களை இந்த உலகம் பார்த்தது. இதில் 60 சதவிகிதம் பேர் குழந்தைகள். அதிகமான கூட்டங்களுக்கு நடுவே நெரிசலில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.
அவர்களின் அடுத்த வேளை உணவு கேள்விக்குறியாக உள்ளது. இருப்பிடமும் கேள்விக்குறியாக உள்ளது. இங்கிருக்கும் குழந்தைகள் எந்த எதிர்காலமும் இல்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். குழந்தைகளின் சிரிப்பு மற்றும் கண்ணில் இருக்கும் வெற்றிடத்தை என்னால் உணர முடிகிறது. அவர்களுக்கு நம் உதவித் தேவைப்படுகிறது” என்று உருக்கமாக பதிவு செய்துள்ளார்.
,
View this post on InstagramA post shared by Priyanka Chopra Jonas (@priyankachopra) on
முன்பாக சிரிய அகதிகளை பிரியங்கா சோப்ரா ஜோர்டனில் சந்தித்தது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.