விஜே பிரியங்கா என்றாலே தமிழகத்தில் யாருக்கும் தெரியாமல் இருக்காது. பல ஆண்டுகளாக விஜய் டிவியில் தொகுப்பாளினியாக இருக்கும் பிரியங்கா பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.
குறிப்பாக சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில், பிரியங்கா போட்டியாளர்களிடம் பேசுவதை ஜாலியாக இருக்கும். இதில் போட்டியாளர்களின் பாடல்களை விட பிரியங்காவும், மாகாபாவும், சேர்ந்து அடிக்கும் லூட்டிகள் தான் பார்வையாளர்களுக்கு ரொம்ப பிடிக்கும்.
தற்போது சூப்பர் சிங்கர் ஜூனியர் 9-வது சீசனை பிரியங்கா தொகுத்து வழங்குகிறார்.
இந்த போட்டியில், சிறுமி சனு மித்ரா தனது குரலில் பாடி அனைவரையும் ஆச்சரியப்படுத்தி வருகிறார்.
கடந்த வார நிகழ்ச்சியில், சனு மித்ரா தனது கதையை பகிர்ந்து கொண்டபோது, மொத்த அரங்கமும் சோகத்தில் ஆழ்ந்தது.
இப்போது 6ஆம் வகுப்பு படிக்கும் சனு மித்ராவுக்கு பாட்டு பாட ரொம்ப பிடிக்கும். இன்று சூப்பர் சிங்கர் மேடையில் ஒலிக்கும் இந்த இனிய குரலுக்கு பின்னால், ஒரு தந்தையின் தியாகம் இருக்கிறது.
சனு மித்ராவின் இசை ஆர்வத்துக்கு, உறுதுணையாக இருந்த அவளது தந்தை, சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் முதல் கட்ட ஆடிசனுக்கு அவளைக் கூட்டிச் சென்றுள்ளார். பிறகு வீட்டுக்குத் திரும்பி வரும் போது ஒரு விபத்தில் அவர் இறந்து போனார். இப்போது சனுவின் அம்மா தான் அவளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வருகிறார்.
/indian-express-tamil/media/media_files/w7V83BTYX5MBbuQSRRCw.jpg)
சனுவின் கதையைக் கேட்டு அரங்கத்தில் இருந்த அத்தனை பேரும் மனம் தாங்காமல் கண்கலங்கினர்…
பின்னர் சனு மித்ராவை கட்டியணைத்து பிரியங்கா ஆறுதல் கூறினார்.
அப்போது பிரியங்கா, நானும், என்னுடைய 11 வயதில் என் தந்தையை ஹார்ட் அட்டாக்கில் இழந்தேன். என் அம்மா தான், எங்களை ஒரு தந்தை போல இருந்து பார்த்து கொண்டார். தந்தை நம்மை எப்போதும், நம்மோடு இருந்து, ஆசீர்வதிப்பார் என்று சனுவுக்கு ஆறுதல் சொன்னார்.
இந்நிகழ்ச்சியில் நடுவராக இருக்கும் இசையமைப்பாளர் தமனும் ரயிலில் பயணம் செய்த போது தன் தந்தை ஹார்ட் அட்டாக்கில் இறந்த சம்பவத்தை கூறினார்.
’என்னுடைய 9 வயதில், ரயிலில் பயணிக்கையில் ஹார்ட் அட்டாக்கால் பாதிக்கப்பட்டு என் தந்தை தவறிவிட்டார். நாங்கள் அனைவரும் உன் கூட இருப்போம், எதற்கும் கவலைப்படக்கூடாது’ என்று சனுவுக்கு தமன் ஆறுதல் கூறினார்.
இந்த வீடியோ டி.வி.யில் ஒளிபரப்பான போது ரசிகர்களும் இந்த கதையை கேட்டு கண்கலங்கி விட்டனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“