/indian-express-tamil/media/media_files/c2Jb9SXVKQE0ERcxiEny.jpg)
சூப்பர் சிங்கர் ப்ரியங்கா, ஷூட்டிங் போது, அவர் தவறி மேடையில் விழுந்ததால் தாடையில் அடிபட்டுள்ளது. இந்நிலையில் என்ன நடந்தது என்பதை அவரே கூறியுள்ளார்.
இசையமைப்பாளர் தேவா பாடிக்கொண்டிருந்த போதுதான் ப்ரியங்கா மேடையில் கீழே விழுந்தார். அவருக்கு தாடையில் கடுமையாக அடிப்பட்டுள்ளது. இது தொடர்பாக அவர் கூறுகையில் “ஷூட்டிங் முடிய கடைசி 3 லிங்தான் இருக்கிறது என்பதால் வேகமாக நிகழ்சியை தொகுத்து வழங்கினேன். அப்போது தேவா சார் பாடிக்கொண்டிருக்கும்போது, நான் தவறி மேடையில் விழுந்துவிட்டேன். அவர் எனக்காக பாட்டை நிறுத்திவிட்டார். நான் சரியாகி மீண்டும் நிகழ்ச்சியை தொடங்கும் வரை என்னை பற்றி அதிகம் கவலைபட்டார்.
எனக்கு இப்படி நடந்தது என்று, தற்போது வீடியோ எடுக்கும் நபரிடம் கூறினேன். ஆனால் அவரோ,சாதாரண பாவ் பாஜி வேண்டுமா ? அல்லது சீஸ் பாவ் பாஜி வேண்டுமா? என்று கேட்கிறான். இப்படியா ? கேட்பது என்று அவர் கூற, அதற்கு நீ என்ன பதில் சொன்னாய் என்று அவர் கேட்கிறார். நான் சீஸ் பாவ் பாஜி வேண்டும் என்று சொன்னேன் என்று அவர் கூறுகிறார்.
இந்நிலையில் இதைத்தொடர்ந்து அவரது வீட்டில் நண்பர்கள், தம்பி, தம்பி மனைவி, அம்மா என்று அனைவரும் ஒன்று கூடுகிறார்கள். இது தொடர்பாக பேசும் ப்ரியங்கா, “ அனைவரும் வேலை விட்டு எனக்கா வந்தார்கள் என்று நினைத்தேன். எனக்கு என்ன வேண்டும் ஹர்லிக்ஸ் வேண்டுமா ? இல்லை பழங்கள் வேண்டுமா? என்று கேட்டார்கள். ஆனால் இப்போது இங்கே வந்து எனக்கு செலவு, வைக்கிறார்கள். பீட்சா, பாஸ்தா, கார்லிக் பிரட், நாச்சோஸ், சீஸ் டிப் போன்ற உணவுகளை கேட்கிறார்கள் என்று கூறுகிறார்.
தொடர்ந்து குடும்பத்துடன் புது வருடத்தை கேக் வெட்டி கொண்டாடுகிறார். தொடர்ந்து 2023 முடிவில் எனக்கு நிறைய அனுபவம் கிடைத்தது. எனக்காக அன்பு காட்ட நிறை உயிர்கள் இருக்கிறார்கள் அவர்களுக்காக நான் தொடர்ந்து ஓடுவேன். 2024 எனக்கு நன்மைகளையும், என்ன செய்ய காத்திருக்கிறதோ என்ற கேள்வியை ஏற்படுத்தியதாக கூறுகிறார். தொடர்ந்து அவர் தாடையில் ஏற்பட்ட காயத்தை மேக் ஆப் போட்டு மறைத்துவிட்டு, அவர் அடுத்த நிகழ்ச்சிக்கான படப்பிடிப்பிற்கு கிளம்புகிறார். இதைத்தொடர்ந்து, அவர் குடும்பத்துடன் கோவிலுக்கு செல்கின்றனர். அங்கு எடுத்துகொண்ட படங்களை அவர் வீடியோவில் இணைத்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.