Advertisment

தீர்த்த கங்கா, உபத், லுவாக் காபி: பிரியங்கா நல்காரி 'பாலித்தீவு' கிளிக்ஸ்

தீர்த்த கங்கா, உபத், லும்புங் சாரி ஹவுஸ் ஆஃப் லுவாக் காபி என பல இடங்களில் சுற்றிப் பார்த்த போது எடுத்த படங்களை தன் இன்ஸ்டாவில் பகிர்ந்திருக்கிறார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
priyanka nalkari bali

Priyanka Nalkari

சீரியல் பிரபலம் பிரியங்கா நல்காரி சமீபத்தில் இந்தோனேஷியாவின் பாலித் தீவுக்கு சுற்றுலா சென்றார். அங்கு தீர்த்த கங்கா, உபத், லும்புங் சாரி ஹவுஸ் ஆஃப் லுவாக் காபி என பல இடங்களில் சுற்றிப் பார்த்த போது எடுத்த படங்களை தன் இன்ஸ்டாவில் பகிர்ந்திருக்கிறார்.

Advertisment

இந்தோனேசியாவின் பாரம்பரிம் நிறைந்த சிறு தீவுப் பகுதி பாலி.  இது ஒரு சிறிய, பண்பாடுகள் நிறைந்த, மக்கள் வாழும் தீவு.  ஜாகர்த்தா தீவுக்கு அருகில் இருப்பதால் அங்கு செல்பவர்கள் பாலித்தீவுக்கும் செல்கின்றனர்.

பாலி இன்றும் சுற்றுலாப் பயணிகளை பெருமளவில் ஈர்ப்பதற்கு காரணம் அதன் இயற்கை வனப்பும் கடற்கரைகளும்தாம். இங்கு உள்ளூர் பயணத்துக்குச் சாலை வழிகள் மட்டுமே உண்டு.

பாலி முழுக்க சுற்றிப் பார்க்க ஏராளமான இடங்கள் உள்ளன. பாலியின் பாரம்பரிய ஓவியங்கள், கலைப்பொருட்கள் நிறைந்த புரி லுகிசான் அருங்காட்சியகம், உபுட் மன்னர் குடும்பத்தின் அதிகார அரண்மனை, அதன் அருகில் பாரம்பரிய ஆர்ட் மார்க்கெட்- இங்கு கைவினைப் பொருட்கள் உட்பட பலவும் கிடைக்கின்றன.

186 வகை மரங்கள் கொண்ட குரங்கு காடு, யானை சவாரி, எரிமலைகள், அருவிகள், பைக் சாகம், கடலில் ஸ்னார்கலிங்எனப்படும் சாகசம் என இன்னும் பல அம்சங்கள் நிறைந்துள்ளன. ஏரிகள், புத்த கோயில்கள், மாலையில் சூரியன் அந்தி சாயும் அழகு, பாரம்பரிய பாலி நடனங்கள், வண்ணத்துப்பூச்சி பூங்கா இப்படி பல வகையான இடங்கள் உள்ளன.

தீவுகளுக்கு சுற்றுலா செல்லும் ஆர்வம் உள்ளவர்கள் மட்டுமன்றி எல்லோருமே வாழ்நாளில் ஒருமுறையாவது பாலித் தீவைப் பார்க்க வேண்டும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment