உணவை உறைய வைப்பது உண்மையில் பாதுகாப்பானதா?

நாம் அனைவரும் உணவை உறைய வைத்து மீண்டும் சூடாக்குகிறோம். ஆனால் நாம் செய்வது சரியா? அல்லது அப்படிச் செய்யும் போது அனைத்து ஊட்டச்சத்துகளையும் இழக்கிறோமா?

freezing food
Professional chef shares about Pros and cons of freezing food

நாம் அனைவரும் மிகவும் பிஸியான வாழ்க்கையில் இருக்கிறோம்., நன்றாக சாப்பிடுவதற்கு போதுமான அளவு சம்பாதிக்கிறோம். ஆனால் நமக்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு உணவையும் சமைப்பதற்கு போதுமான நேரம் கிடைப்பதில்லை.

இயற்கையாகவே சில நாட்களுக்கு’ ஃபிரிட்ஜில் உறைந்த அல்லது பாதுகாக்கக்கூடிய உணவுப் பொருட்கள் மற்றும் உணவுகளை சார்ந்து இருக்கிறோம், இதனால் ஒவ்வொரு நாளும் சமைக்க வேண்டிய அழுத்தத்தை குறைக்கிறோம்.

சாஸேஜ், இறைச்சி மற்றும் ரெடிமேட் வெஜ் டிக்காக்களை சேமிப்பதில் இருந்து, மாரினேட் செய்யப்பட்ட கோழி மற்றும் மீன்களை டீப் ஃப்ரீசரில் சேமிப்பது வரை- வாழ்க்கையை எளிதாக்குவதற்கு, நேரத்தையும் உழைப்பையும் மிச்சப்படுத்தும் முறைகளை நாம் பின்பற்றுகிறோம்.

ஆனால் நாம் செய்வது சரியா? உணவை உறைய வைக்கும் போது நாம் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன? உறைந்த உணவை எப்படி மீண்டும் சூடாக்க வேண்டும்? நாங்கள் இரண்டு சமையல் கலைஞர்களிடம் இந்தக் கேள்விகளைக் கேட்டோம், அவர்கள் பகிர்ந்து கொண்டது இங்கே:

வீட்டில் சமைத்த உணவு, கோழி மற்றும் மீன் ஆகியவற்றை உறைய (freezing)  வைப்பதன் நன்மை தீமைகள் என்ன?

“வழக்கமான வீட்டில் சமைத்த உணவை ஃப்ரீசரில் வைப்பது, உணவுக்கு நீண்ட ஆயுளைக் கொடுக்கிறது, எனவே மீண்டும் ஃப்ரீசரில் வைத்து, கொஞ்சம் கொஞ்சமாக உண்ணலாம். ஆனால், உணவை மீண்டும் சூடாக்குவது அதன் புத்துணர்ச்சியை எடுத்துக்கொள்வதோடு, சுவையையும் குறைக்கிறது.”  என்கிறார் புது டெல்லி, துசித் தேவரானாவின் நிர்வாக சமையல் கலைஞர் நிஷாந்த் சௌபே.

ஆனால் கோழி மற்றும் மீன்களுக்கு இது பொருந்தாது: “இறைச்சி மற்றும் மீனை உறைய வைப்பது கண்டிப்பாக நீண்ட ஆயுளைக் கொடுக்கிறது, ஏனெனில் இது பாக்டீரியாக்கள் உருவாவதைத் தடுக்கிறது மற்றும் நுகர்வுக்கு பாதுகாப்பானதாகக் கருதப்படுகிறது.”

குறிப்பு: வீட்டில் தயாரிக்கப்பட்ட கறிகளை மூன்று நாட்களுக்கு மேல் ஃப்ரீசரில் வைக்க வேண்டாம். ஃபிரிட்ஜில் சேமித்த, கோழி மற்றும் மீன் இறைச்சிகளை வாங்கிய ஒரு வாரத்திற்குள் பயன்படுத்த வேண்டும்.

உறைந்த உணவை மீண்டும் சூடுபடுத்துவதற்கான சிறந்த வழி எது?

உறைந்த பொருட்களை சூடாக்க சிறந்த வழி, ஃப்ரீசர் வெளியே மணிக்கணக்கில் வைப்பது அல்லது மைக்ரோவேவ் செய்வது என்று நீங்கள் நினைக்கலாம், ஆனால் அது தவறு.

புது டெல்லியில் உள்ள ஜங்கிலி பில்லியில் உள்ள தலைமைச் செஃப், பவன் பிஷ்ட்டின் கூற்றுப்படி, ஃப்ரிட்ஜில் அதைக் கரைப்பதே சிறந்த வழி.

“இதற்குப் பின்னால் உள்ள காரணம், அறை வெப்பநிலையில் பாக்டீரியா வேகமாக வளர்ந்து இனப்பெருக்கம் செய்கிறது. அதேபோல மைக்ரோவேவில் சூடாக்குவதால், உணவு, உலர்ந்து சுவையற்றதாக மாறுகிறது. “உணவை மீண்டும் சூடுபடுத்துவதற்கான சிறந்த வழி, அதை அடுப்பு மேல் வைப்பது அல்லது டபுள் பாய்லர் செய்வதுதான். இதைச் செய்வதன் மூலம், உணவின் ஊட்டச்சத்துக்கள் பாதிக்காமல் கிட்டத்தட்ட அதன் அசல் தன்மைக்கு திரும்பும்.”

உதவிக்குறிப்பு: மைக்ரோவேவ் வேகமானது, ஆனால் அவை உணவில் உள்ள ஊட்டச்சத்துக்களை உடைத்து, அதிலிருந்து சுவையை உறிஞ்சும். எனவே, உங்களால் முடிந்தவரை மைக்ரோவேவில் இருந்து விலகி இருங்கள்.

பேக்கேஜ் செய்யப்பட்ட உறைந்த உணவின் ‘செல் பை’, ‘யூஸ் பை’ மற்றும் காலாவதி தேதிகளை நாம் நம்பலாமா?

பாக்கெட் செய்யப்பட்ட ஃப்ராசன் உணவுப் பொருட்கள்’ ஆபத்து பகுப்பாய்வு மற்றும் முக்கியமான கட்டுப்பாட்டுப் புள்ளிகள் (HACCP) வழிகாட்டுதல்களின் கீழ் லேபிளிடப்பட்டுள்ளன, எனவே அவை நம்பப்படலாம்.

உறைந்த உணவை வாங்குவதற்கு முன், நுகர்வோர் காலாவதி தேதிகள் குறித்து கவனமாக இருக்க வேண்டும்.” இருப்பினும், புதிய உணவுப் பொருட்களை வாங்குவது இன்னும் சிறந்தது,

உறைந்த (Frozen) உணவை வாங்கும் போது நாம் என்ன செய்ய வேண்டும் மற்றும் என்ன செய்யக்கூடாது?

இறைச்சி அல்லது உறைந்த உணவுப் பொருட்கள் அவற்றின் இயற்கையான நிறத்தைக் கொண்டிருக்க வேண்டும், அதனால் ஒவ்வொருமுறை வாங்குவதற்கு முன் அதன் நிறத்தை சரிபார்ப்பது மிகவும் முக்கியம்.

சில அத்தியாவசிய ஷாப்பிங் குறிப்புகள்!

புத்திசாலித்தனமாக ஷாப்பிங் செய்யுங்கள். சந்தையில் பெரிய மற்றும் நன்கு அறியப்பட்ட பிராண்டுகளுக்கு எப்போதும் செல்லுங்கள்.

ஒவ்வொரு முறையும் காலாவதி தேதிகள், உற்பத்தி தேதிகளை சரிபார்க்கவும்.

சேதப்படுத்தப்பட்ட பேக்கேஜிங் கொண்ட பொருட்களை வாங்க வேண்டாம்.

அதிகமாக வாங்காதீர்கள். குறுகிய காலத்திற்குள் நுகரக்கூடியதை மட்டுமே வாங்கவும்.

முடிந்தவரை நீங்கள் செய்ய வேண்டிய ஒன்று, புதிய தயாரிப்புகளைப் பயன்படுத்துவதாகும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Professional chef shares about pros and cons of freezing food

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com