கற்ப காலத்தில் பெண்கள் செய்யும் மிகப் பெரிய தவறு! டாக்டர்களின் அலர்ட் ரிபோர்ட்!!!

பெண்கள் தனது கற்ப காலத்தில் உணவு முறைகளிலும், உடல் பராமரிப்பிலும் நிறையத் தவறுகளை செய்வார்கள். இவை அனைத்துமே சரி செய்து விடக்கூடியதாக இருக்கும். ஆனால் குறிப்பிட்ட ஒரு மருத்தை மட்டும் அதிகம் எடுத்தால் சீர் செய்ய முடியாத அளவிற்குக் குழந்தை பாதிக்கப்படும். அதன் விவரங்களைத் தான் இந்தக் கட்டுரையில்…

By: Updated: April 30, 2018, 04:05:33 PM

பெண்கள் தனது கற்ப காலத்தில் உணவு முறைகளிலும், உடல் பராமரிப்பிலும் நிறையத் தவறுகளை செய்வார்கள். இவை அனைத்துமே சரி செய்து விடக்கூடியதாக இருக்கும். ஆனால் குறிப்பிட்ட ஒரு மருத்தை மட்டும் அதிகம் எடுத்தால் சீர் செய்ய முடியாத அளவிற்குக் குழந்தை பாதிக்கப்படும். அதன் விவரங்களைத் தான் இந்தக் கட்டுரையில் படிக்கப் போகிறீர்கள்.

நம் அனைவருக்கும் உடல் வலி, காய்ச்சல் அல்லது ஜலதோஷம் ஏற்பட்டால் உடனே நினைவுக்கு வருவது பாராஸிட்டமால் மருந்து தான். அருகாமையில் உள்ள மருந்தகத்திற்குச் சென்று நாமே இந்த மருந்தை வாங்கி உட்கொள்வோம். சாதாரணமாக இருப்பவர்களே இந்த மருந்தை அடிக்கடி அருந்துவதைத் தவிக்க வேண்டும் என்றால் கர்ப்பிணி பெண்கள் இதைச் சாப்பிடலாமா? அமெரிக்காவின் ஆய்வு கூறுவது என்ன?

சமீபத்தில் அமெரிக்காவில் நடத்திய ஆய்வில் பாராசிட்டமால் பற்றிக் கண்டறியப்பட்ட விவரங்கள் நோயியல் துறையின் பத்திரிக்கையில் (American Journal of Epidemiology) வெளியாகியுள்ளது. இந்தக் கட்டுரையில் பாராஸிட்டமால் மாத்திரையால் கருவில் உள்ள குழந்தைகளுக்கு ஏற்படும் விளைவுகள் பற்றி கூறப்பட்டுள்ளது. இந்த ஆய்விற்குப் பிறகு உலகில் உள்ள கர்ப்பிணி பெண்கள் அனைவருக்கு மருத்துவர்கள் அலர்ட் எச்சரிக்கை விடுக்கின்றனர்.

ஆய்வில், கற்ப காலத்தில் உடல் வலி அல்லது காய்ச்சல் போன்ற உபாதைகள் ஏற்பட்டால் குறைவான பாராசிட்டமால் மருந்தை மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும். அளவுக்கு மீறி உபயோகித்தால் பிறக்கும் குழந்தைகள் ஆட்டிஸம் நோயுடன் பிறக்கும் என்று கூறியுள்ளனர்.

பாராஸிட்டமால் மாத்திரைகளை அஸிட்டமினோஃபென் (acetaminophen) என்றும் அழைக்கின்றனர். இந்த அஸிட்டமினோஃபென் உடல் வலி, காய்ச்சல் மற்றும் ஜலதோஷம் போன்றவற்றை குணப்படுத்தும் தன்மை கொண்டது. இதனைக் கர்ப்பிணி பெண்கள் குறைந்த அளவில் மட்டுமே உபயோகிக்க வேண்டும். முதலில் எடுத்துக்கொள்ளும் டோஸில் உடல் உபாதை குணமடையவில்லை என்றால் தகுந்த மருத்துவர்களிடம் பரிசோதனை செய்த பிறகே மருந்துகள் அருந்த வேண்டும்.

அலட்சியத்தினால் அல்லது மருத்துவரைச் சந்திக்க நேரக் குறைவு உள்ளது என்பதால் மருத்துவரைச் சந்திக்காமல் பாராஸிட்டமால் மாத்திரைகளை அருந்தினால், கருவில் இருக்கும் குழந்தைகளுக்கு நரம்பியல் வளர்ச்சி குறைபாடுகள் ஏற்படும். இதனால் மூளை வளர்ச்சி பாதிக்கப்பட்டு பிறக்கும் குழந்தைகள் ஆட்டிஸம் நோயுடன் பிறக்கும். எனவே இது குறித்து தீவிர எச்சரிக்கையில் மருத்துவர்கள் இறங்கியுள்ளனர்.

மேலும் இது குறித்து இந்த ஆய்வில் ஈடுபட்டிருந்த ஆராய்ச்சி நபர் இலான் மட்டோக், இஸ்ரேலில் உள்ள ஹீப்ரூ பல்கலைக்கழகத்தை சேர்ந்தவர். இவர் கூறியதாவது:

“இந்த ஆய்வின் மூலம் அதிகமாக பாராஸிட்டமால்/அஸிட்டமினோஃபென் பயன்படுத்தினால், பிறக்கும் குழந்தைகள் பெரும்பாலும் ஆட்டிஸத்துடன் பிறக்கும். ஒரு முறை இந்த மாத்திரை போட்டும் உடல் நலம் சரியாகவில்லை என்றால் உடனே உங்களின் மருத்துவரிடம் ஆலோசனைக்குச் செல்லுங்கள். தேவையற்ற அளவில் இது போன்ற மருந்துகள் சாப்பிட்டால் பிறக்கும் குழந்தைகள் பாதிப்புடன் பிறக்கும்.” என்றார்.

தற்போது உலகம் முழுவதும் பரவி வரும் இந்தத் தகவல்களினால், கர்ப்பிணிப் பெண்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்குமாறு பெண்களின் குடும்பத்தினர் மற்றும் மருத்துவர்கள் கூறி வருகின்றனர்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Lifestyle News by following us on Twitter and Facebook

Web Title:Prolonged paracetamol use pregnancy may autism adhd risk

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X