முடி பராமரிப்பு என்று வரும்போது, கூந்தலின் மீட்புக்கு பல வீட்டு வைத்தியங்கள் உள்ளன. நீங்கள் சோஷியல் மீடியாவில் இருந்தால், ஆப்பிள் சைடர் வினிகரைக் கொண்டு முடியை அலசுபவர்களின் வீடியோக்களை நீங்கள் கவனித்திருக்க வேண்டும். நீங்கள் இந்த டிரெண்டிற்குள் செல்வதற்கு முன், இது உண்மையில் முயற்சி செய்யத்தக்கதா என்பதைக் கண்டுபிடிப்போம்.
ஆப்பிள் சைடர் வினிகர் உங்கள் தலைமுடியை சுத்தப்படுத்தும் மற்றும் கூந்தலை ஃப்ரீஸ் ஆகாமல் தடுக்கும் என கூறப்படுகிறது.
அது எப்படி செயல்படுகிறது?
சில சர்வதேச தொழில்முறை நிபுணர்களின் கூற்றுப்படி, ஆப்பிள் சைடர் வினிகர் (ACV) ஷாம்புக்கு மாற்றாக பயன்படுத்தப்படுகிறது. உங்கள் தலைமுடியின் நிறத்தை அகற்றாமல் முடி அல்லது உச்சந்தலையில் சிக்கியுள்ள அனைத்து அழுக்குகளையும் கழுவ இது உதவும்.
ஆப்பிள் சைடர் வினிகரால் தலைமுடியை கழுவுதன் நன்மைகள்
ஆப்பிள் சைடர் வினிகர் முடி பராமரிப்புக்கான ஒரு அருமையான மூலப்பொருள் என்று கூறப்படுகிறது. இதில் வைட்டமின் பி, ஃபோலிக் அமிலம், வைட்டமின் சி உள்ளது. இது கூந்தலின் மந்தமான தன்மை மற்றும் சுருட்டை நீக்கவும் உதவுகிறது.
சிறந்த அம்சம் என்னவென்றால், இது அனைத்து முடி வகைகளுக்கும் நல்லது.
எச்சரிக்கை
உங்கள் தலைமுடியை கழுவ சுத்தமான ஆப்பிள் சீடர் விணிகரை பயன்படுத்துவதற்கு முன், கவனமாக இருங்கள். வீடுகளில் பயன்படுத்தும் ஆப்பிள் சீடர் வினிகர் ஒரு அஸ்ட்ரிஜென்ட் மற்றும் தனியாகப் பயன்படுத்தும்போது கூந்தலுக்கு கடுமையானதாக இருக்கும்.
எனவே அதன் நன்மையைத் தக்கவைத்து, உச்சந்தலையில் மென்மையாக மாற்ற, இதை இயற்கை பொருட்களுடன் கலந்து கண்டிஷனிங் செய்ய வேண்டும்.
நீங்கள் வீடுகளில் இருக்கும் ஆப்பிள் சீடர் வினிகரை பயன்படுத்த விரும்பினால், 3 டேபிள்ஸ்பூன் அளவுடன் குறைந்தது 4 கப் தண்ணீருடன் கலந்துள்ளதை உறுதிசெய்யவும்.
சல்பேட்டுகள் இல்லாததால், அது நுரைக்காது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
எவ்வளவு அதிகமாக உள்ளது?
ஆப்பிள் சைடர் வினிகர் கழுவுவதற்கு மென்மையானது, ஆனால் நீங்கள் அதை மிகையாக பயன்படுத்தக் கூடாது.
இது அடிப்படையில் ஒரு க்ளீன்சர் ஆகும், இது உங்கள் தலைமுடியின் இயற்கையான எண்ணெய்களை அப்படியே வைத்திருக்கும், ஆனால் இது பெரும்பாலும் ஷாம்பூவைப் பயன்படுத்துவதால் கழுவப்படும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”