சிலிகான் சமையல் பாத்திரங்கள் பாதுகாப்பானதா? நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது இங்கே!

சிலிகான் மக்கும் தன்மையற்றது, ஆனால் பிளாஸ்டிக்கை விட சுற்றுச்சூழலுக்கு உகந்தது.

மக்கள் தங்கள் உணவை சமைக்க எந்த வகையான பாத்திரத்தைப் பயன்படுத்துகிறார்கள் என்பதில் கவனமாக இருக்க வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக ஆரோக்கியமான உணவு என்பது பல காரணிகளைப் பொறுத்தது, அதில் சமையல் பாத்திரங்கள் மிக முக்கியமாக பரீசிலனை செய்யவேண்டிய ஒன்றாகும்.

சமீப காலங்களில், சிலிகான் சமையலறைப் பொருட்கள், ஸ்பேட்டூலாக்கள், கரண்டிகள், தூரிகைகள், ஸ்ட்ரெட்ச், மொல்ட்ஸ் மற்றும் இடுக்கி போன்றவை, பிளாஸ்டிக், மரம், துருப்பிடிக்காத எஃகு மற்றும் அலுமினியத்தை விட பிரபலத்தையும் விருப்பத்தையும் பெற்றுள்ளன. சிலிகான் பாத்திரங்கள் நெகிழ்வானதாகவும் நீடித்ததாகவும் இருக்கும்; அதனால் அவை பாத்திரங்களை கீறாது.

சிலிக்கான் ஒரு சிந்தெட்டிக்(Rubber), இதில் “பிணைக்கப்பட்ட சிலிக்கான் மற்றும் ஆக்ஸிஜன் (மற்றும் சில சமயங்களில் கார்பன்)” உள்ளது. மக்கள் பெரும்பாலும் சிலிகான் என்பது பிளாஸ்டிக் என்று நினைக்கிறார்கள். சிலிகான் சிலிக்கா அல்லது மணல் குவார்ட்ஸில் இருந்து வருகிறது. கார்பனுக்குப் பதிலாக, “சிலிகானின் முக்கிய மூலப்பொருள் சிலிக்கான் ஆகும்.

சிலிக்கான் தானே உருவாவது இல்லை, சிலிக்காவில் இருந்து பெறப்பட்டது. “இதை அடைய, மணலில் ஏராளமாக உள்ள சிலிக்கா என்ற கனிம குவார்ட்ஸ் 1800˚C வரை வெப்பப்படுத்தப்படுகிறது. இதன் விளைவாக வரும் சிலிக்கான் குளிர்ந்து நன்றாக தூளாக மாறும் வரை அரைக்கப்படுகிறது.

தொழில்துறையில் சிலிகான் தயாரிப்புகள் சாதாரண சிலிக்கா ஜெல்லைப் பயன்படுத்துகின்றன, மற்றும் உணவு தர சிலிக்கா ஜெல் நமது உணவுடன் தொடர்பில் இருக்கும் பொருட்களில் பயன்படுத்தப்படுகிறது.

தரத்தை தீர்மானிக்க இரண்டு வழிகள் உள்ளன:

1. வாசனை: சாதாரண சிலிகான் ஒரு வலுவான வாசனையைக் கொண்டுள்ளது. சில உணவு தர சிலிக்கா ஜெல்களில் சிறிது வாசனை இருந்தாலும், ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு அவை தானாகவே அகற்றப்படுவதால் பயன்பாட்டிற்கு பாதுகாப்பானவை.

2. தொடுதல்: உணவு தர சிலிக்கா ஜெல் நல்ல கடினத்தன்மை மற்றும் நெகிழ்வுத்தன்மை கொண்டது. சாதாரண சிலிகான் பொருட்கள் எளிதில் சிதைந்து, தொடுவதற்கு கடினமானதாக மாறுகின்றன.

சிலிகான் பாத்திரங்களின் நன்மைகள்:

*விலை குறைவு.

*சிலிகான் சமையலறைப் பொருட்கள் 428˚F அல்லது 220˚C வரை அதிக வெப்பநிலையைத் தாங்கும். ஸ்டீமிங் மற்றும் ஸ்டீமிங் பேக்கிங்கிற்கு இது சிறந்தது.

*அவை நெகிழ்வானவை. திடீர் வெப்பநிலை மாற்றங்கள் ஏற்பட்டாலும், அவை விரிவடைவதோ அல்லது சுருங்குவதோ இல்லை. இதனால்தான் சிலிகான் பேக்வேர் ஃப்ரீசரில் இருந்து ஓவனுக்கு விரிசல் இல்லாமல் செல்ல முடியும்.

*சிலிகான் சமையல் பாத்திரங்கள் கறையை எதிர்க்கும். அவை நாற்றங்களையோ நிறங்களையோ தக்கவைத்துக்கொள்வதில்லை.

*குழந்தைகளுக்கு பாதுகாப்பானது.

*சிலிகான் சமையல் பாத்திரங்கள் துருப்பிடிக்காதவை மற்றும் நீண்ட காலம் நீடிக்கும்.

*சிலிகான் மக்கும் தன்மையற்றது, ஆனால் பிளாஸ்டிக்கை விட சுற்றுச்சூழலுக்கு உகந்தது.

*சிலிகானை விட பிளாஸ்டிக் குறைவாக நீடிப்பதால் அவை அடிக்கடி மாற்றப்பட்டு, அதிக கழிவுகளை உண்டாக்குகிறது.

மாற்று வழிகள்

டிப்ஸ் மற்றும் பேட்டர் (dips and batters) போன்ற குளிர்ந்த உணவுகளுடன் வேலை செய்ய சிலிகான் ஸ்பேட்டூலாக்களை மட்டுமே பயன்படுத்துதல், சூடான உணவுகளுக்கு, உலோகம், மரம் அல்லது மூங்கில் கரண்டிகள், ஸ்பேட்டூலாக்கள் மற்றும் பிற பாத்திரங்கள் சிறந்தவை.

“உயர்தர சிலிகான் சமையலறைப் பாத்திரங்களைத் தேர்ந்தெடுங்கள் – அவை நான்-ஸ்டிக் மஃபின் பான்கள் மற்றும் கேக் டின்களுக்கு சிறந்த மாற்றாகும். அவை மீண்டும் பயன்படுத்தப்படலாம், மேலும் எண்ணெய் இல்லாத அல்லது குறைந்த கொழுப்பு சமையலுக்கு சிறந்தவை. பயன்பாட்டிற்கு முன் நீங்கள் சமையல் பாத்திரங்களை கிரீஸ் செய்ய வேண்டியதில்லை. ஆனால் நீங்கள் வார்ப்பிரும்பு வாங்க முடியும் என்றால், சிலிகானுக்கு மாற்றாக அதை வாங்கலாம்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Pros and cons of silicone cookware in tamil

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com