சொரியாசிஸ் முழுமையாக சரியாகும்… இந்த இயற்கை கஷாயம் டிரை பண்ணுங்க; டாக்டர் ஜெயரூபா
சொரியாசிஸ் என்பது ஒருவகை ஆட்டோஇம்யூன் தோல் நோயாகும். மரபியல் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியின் அதிக செயல்பாடினால் உருவாகும். தோல் பிரச்னைகளை கட்டுப்படுத்தும் இயற்கை கஷாயம் வீட்டிலேயே எளிதாக தயாரிக்கலாம்.
சொரியாசிஸ் என்பது ஒருவகை ஆட்டோஇம்யூன் தோல் நோயாகும். மரபியல் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியின் அதிக செயல்பாடினால் உருவாகும். தோல் பிரச்னைகளை கட்டுப்படுத்தும் இயற்கை கஷாயம் வீட்டிலேயே எளிதாக தயாரிக்கலாம்.
சொரியாசிஸ் முழுமையாக சரியாகும்… இந்த இயற்கை கஷாயம் டிரை பண்ணுங்க; டாக்டர் ஜெயரூபா
சொரியாசிஸ் என்பது ஒருவகை ஆட்டோ இம்யூன் தோல் நோயாகும். மரபியல் காரணங்களாலும், நோய் எதிர்ப்பு சக்தியின் அதிக செயல்பாடினாலும் உருவாகும். ஒவ்வொரு நாளும் மனித உடலில் இயற்கையாகவே சில செல் மரணங்களை எதிர்ப்பு சக்தி கண்டறிந்து வெளியேற்றும். ஆனால் சில சமயங்களில் மன அழுத்தம், மரபியல் கோளாறுகள், சரியான உணவமைப்பு இல்லாமை ஆகியவற்றால் எதிர்ப்பு சக்தி மிக அதிகமாக தூண்டப்படுகிறது. இதனால் நம்முடைய தோல் செல்கள் விரைவாகப் பெருகி தோலில் மேல் அடுக்காக சேர்ந்து விட்டுப் பசலை நிறத்திலும், உலர்ந்த மேல் சருகுகளுடனும் தோல்வடிவம் காணப்படுகின்றன. இதுவே சொரியாசிஸ்.
Advertisment
சொரியாசிஸின் அறிகுறிகள்:
தோலில் இறுக்கும் போன்ற பசலை நிறப் பகுதி, உலர்ச்சி, தோல் வலிப்பு, ஊறல் மற்றும் இரத்தம் வெளியேறுதல், நகங்களில் மாற்றம் (மங்கி போதல், உடைதல்)
சொரியாசிஸை கட்டுப்படுத்த இயற்கை வழிகள்:
Advertisment
Advertisements
உடலை டிடாக்ஸ் செய்யும் மருத்துவ மூலிகைகள், நோய் எதிர்ப்பு சக்தியை சமப்படுத்தும் உணவுகள், மன அழுத்தத்தைக் குறைக்கும் தியானம் மற்றும் மூச்சுப்பயிற்சி, தக்க சத்துகளுடன் கூடிய பழங்கள், காய்கறிகள் மற்றும் ஆவியிடப்பட்ட உணவுகள் சாப்பிடலாம் என்கிறார் மருத்துவர் ஜெயரூபா.
சொரியாசிஸ் சிறந்த தீர்வாக கஷாயம்:
சொரியாசிஸ் போன்ற தோல் பிரச்னைகளை கட்டுப்படுத்தும் இயற்கை கஷாயம் வீட்டிலேயே எளிதாக தயாரிக்கலாம். எப்படி என்று பார்க்கலாம். தேவையான மூலிகைகள்:
1.குடசப்பாலை பொடி (Holarrhena pubescens)
2. அமுக்கிரா (Ashwagandha)
3. தேன் (தேவைப்பட்டால்)
தயாரிக்கும் முறை:
200 மில்லி தண்ணீரை கொதிக்க வைத்து, அதில் குடசப்பாலை மற்றும் அமுக்கிரா 2 டீஸ்பூன் சேர்க்கவும். சுமார் 10 நிமிடங்கள் வரை நன்கு கொதிக்கவிடவும். பின்னர் வடிகட்டி தேவைப்பட்டால் தேன் கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடிக்கவும். இது உங்கள் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை சமப்படுத்தி, தோல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் என்கிறார் மருத்துவர் ஜெயரூபா.
பொறுப்பு துறப்பு:இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.