Advertisment

பருப்பு சாதம், கிச்சடி, சூப்... ஈஸியான இந்த உணவு வகைகள் நமக்கு போதுமானவையா?

psychological effects of Comfort Food :

author-image
WebDesk
New Update
பருப்பு சாதம், கிச்சடி, சூப்... ஈஸியான இந்த உணவு வகைகள்  நமக்கு போதுமானவையா?

கொரோனா பெருந்தொற்றை எதிர்கொள்வது தொடர்பான கடந்த 10 மாத கவலையான வாழ்க்கை பயணங்களில் உணவு மிகப்பெரிய ஆறுதலாய் மாறியது. கொரோனா வைரஸின் பரவல் விகிதம், ​​ஊதியக் குறைப்பு, பணிநீக்கம் போன்ற திடிக்கிடும் செய்திகள் ஒருபுறம் இருந்தாலும், அம்மா, பாட்டியின் கைபக்குவத்தில் செய்யப்பட்ட பருப்பு சாதமும், கிச்சிடியும் நம் மனதையும் வாழ்வையும் எளிதாக்குகிறது.

Advertisment

ஆனால், இத்தகைய எளிதான வீட்டு உணவு, உண்மையில் நல்ல சத்துமிக்கதா? கார்போ ஹைட்ரேட் மற்றும் /  சர்க்கரை-கனமான உணவை உட்கொள்வதன் உடலியல் மற்றும் உளவியல் விளைவுகள் என்ன? என்பதை இக்கட்டுரையில் காண்போம்.

1997ம் ஆண்டு அமெரிக்க உளவியலாளர் லாரி கிறிஸ்டென்சன் மேற்கொண்ட ஆய்வில்… “ மனச்சோர்வைக் குறிக்கும் அறிகுறி உடையவர்கள்  இனிப்பு  மற்றும்எளிய கார்போஹைட்ரேட்  உணவுகளுக்கு முன்னுரிமை காட்டுகின்றனர். கார்போஹைட்ரேட்டுகள்நியாசின் (வைட்டமின் பி 3) உருவாக்கும் டிரிப்டோபன் அமினோ அமிலம் கிடைக்கும் தன்மையை அதிகரிகிறது. ஒற்றை அமைன் நரம்பு சமிக்ஞை கடத்தியான செரோடோனினை  உருவாக்க நியாசின் அவசியமாகிறது. தூக்கம் மற்றும் செரிமானத்தை கட்டுப்படுத்த உதவுவதோடு, மகிழ்ச்சியாகவும், நலமாகவும் இருப்பதாக நினைக்கும் உணர்வுகளுக்கு செரோடோனின் பங்களிப்பதாக பொதுவாக நம்பப்படுகிறது. சுருக்கமாக, கார்போஹைட்ரேட்டுகள் மனநிலையை மேம்படுத்த உதவுகின்றன" என்று தெரிவிக்கப்பட்டது.

 

கொரோனா பொதுமுடக்கத்தால் ஏற்பட்ட  மன உளைச்சல் காரணமாக பலரும் உணவில் நாட்டம் செலுத்தியதில் ஆச்சரியப்படுவதற்கில்லை.

மருத்துவ ஊட்டச்சத்து நிபுணர் லாரா டி ரென்சோ தலைமையிலான இத்தாலிய ஆராய்ச்சியாளர்கள் குழு நடத்திய ஆய்வில்," தனிமைப்படுத்துதல், ஊரடங்கு, சலிப்பு, கொரோனாவால் பரிந்துரைக்கப்பட்ட  புதிய  வாழ்க்கை முறைகள் யாவும் முந்தைய உணவுக் கட்டுப்பாட்டு நடத்தைகளை கைவிட வழிவகுத்ததாக 86 சதவீதம் பேர்  தெரிவித்தனர்".

இதேபோல், “பெருந்தொற்று காலங்களில் உணவு” குறித்து  கனடா நாட்டின் நரம்பியல் விஞ்ஞானி மெலிசா ஜே சீ தலைமையிலான ஆய்வில், " பணிநீக்கம், ஊரடங்கு,சமூக விலகல் போன்ற கடுமையான நேரங்களில் இருந்து மீண்டு வர சாப்பாடு முக்கிய பங்கு வகித்தது தெரியவந்தது.

கட்டுரையை, ஆங்கிலத்தில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Food
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment