இந்த வகை சேமிப்புகளில் இப்போது பணம் எடுக்கலாமா? அவசியமான டிப்ஸ்

Income Tax: பணம் திரும்பப் பெறுதல், அபராதம் வசூலித்தல் உடப்ட வேறு வறையரைகளையும் தங்கள் சேமிப்பிலிருந்து நிதியை திரும்ப பெறும் போது கருத்தில் கொள்ள வேண்டும்.

By: Updated: May 13, 2020, 09:16:38 PM

EPFO News: கோவிட்-19 தொற்று நிதி நெருக்கடிக்கு வழிவகுத்துள்ளது. பல நிறுவனங்கள் சம்பளத்தை குறைத்துள்ளதோடு ஊழியர்களையும் குறைத்துள்ளன. தங்கள் செலவினங்களுக்கு நிதியளிக்க, மக்கள் இப்போது பல்வேறு வரி சேமிப்பு வைப்புகளான பொது வருங்கால வைப்பு நிதி -பிபிஎப் (Public Provident Fund -PPF), தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (Employees’ Provident Fund- EPF), தேசிய ஓய்வூதிய திட்டம் (National Pension Scheme -NPS), தேசிய சேமிப்பு சான்றிதழ் (National Savings Certificate -NSC), நிரந்தர வைப்பு நிதி (fixed deposits) ஆகியவற்றில் செய்யப்பட்ட சேமிப்பிலிருந்து பணம் எடுக்க வேண்டியுள்ளது. இவற்றிலிருந்து பணம் திரும்ப எடுப்பது அவசியமாக இருக்கும்போதும், ஒருவர் வரி தாக்கங்களை கவனத்தில் கொள்ள வேண்டும், ஏனெனில் இது கூடுதல் வரி செலவுக்கு வழிவகுக்கும்.

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ

பிபிஎப் மற்றும் ஈபிஎப் கணக்கிலிருந்து பணம் எடுப்பது

பிபிஎப் மற்றும் ஈபிஎப் ஆகிய இரண்டும் விலக்கு-விலக்கு-விலக்கு (exempt-exempt-exempt -EEE) வரி முறையின் கீழ் வருகிறது. ஒரு EEE முறை என்பது, ஒரு நிதியாண்டில் பிபிஎஃப் / இபிஎப்பில் ரூபாய் 1.5 லட்சம் வரை முதலீடு செய்யப்படுவது பிரிவு 80 சி இன் கீழ் விலக்கு என அனுமதிக்கப்படுகிறது. திரும்பப் பெறும் நேரத்தில் திரட்டப்பட்ட வட்டி மற்றும் payment (அசல் மற்றும் வட்டி உட்பட) ஆகியவற்றுக்கு வரி விலக்கு உண்டு.
முதிர்வுக்கு முன்னர் பிபிஎப் மற்றும் ஈபிஎப் ஆக்யவற்றிலிருந்து அனுமதிக்கப்பட்ட அளவில் பணம் எடுப்பதற்கு வருமான வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. எனவே தற்போதைய சூழ்நிலையில் பணத்தை எடுத்து பயன்படுத்த இது ஒரு tax efficient option ஆக கருதப்படலாம்.

என்பிஎஸ் (NPS) சிலிருந்து பணம் எடுப்பது

என்பிஎஸ் ஸும் EEE வரி முறையுடன் வருகிறது. ஒரு தனிநபர் 60 வயதை அடையும் போது திட்டம் முதிர்வடையும். முதிர்ச்சியின் போது, 60% திரட்டப்பட்ட பணத்தை திரும்பப் பெறும் போது வரி விலக்கு கிடைக்கும், அதே சமயம் மீதம் 40% வருடாந்திரத்தில் முதலீடு செய்யப்பட வேண்டும் (இதிலும் வரி விலக்கு கிடைக்கும்).

நிரந்தர வைப்பு நிதியிலிருந்து பணம் எடுப்பது

நிரந்தர வைப்புத்தொகையின் மூலம் கிடைக்கும் வட்டி வரி செலுத்துவோரின் கைகளில் சாதாரண வரி விகிதத்தில் வரி விதிக்கப்படுகிறது. நிலையான வைப்புகளிலிருந்து திரும்பப் பெறும் முதன்மைத் தொகைக்கு வருமான வரி தாக்கங்கள் எதுவும் இல்லை ஆனால் நிலையான வைப்புகளிலிருந்து முதன்மைத் தொகையை முன்கூட்டியே திரும்ப பெறுவது வங்கிகளிடமிருந்தோ அல்லது தபால் நிலையத்திலிருந்தோ சில அபராதக் கட்டணங்களை ஈர்க்கக்கூடும்.

எனவே, பல்வேறு நிதிக் கருவிகளில் முதலீடுகள் உள்ள வரி செலுத்துவோர் வரிச் தாக்கங்களையும், அதே நேரம் பணம் திரும்பப் பெறுதல், அபராதம் வசூலித்தல் உடப்ட வேறு வறையரைகளையும் தங்கள் சேமிப்பிலிருந்து நிதியை திரும்ப பெறும் போது கருத்தில் கொள்ள வேண்டும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Lifestyle News by following us on Twitter and Facebook

Web Title:Public provident fund nps fd pf nsc withdrawal for coronavirus

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X