2020 -21 புதிய நிதியாண்டின் முதல் நாளில் பெரும்பாலான பொது வருங்கால வைப்பு நிதி (பிபிஎப்) முதலீட்டாளர்கள் தங்கள் வாழ்க்கையின் அதிர்ச்சியைப் பெற்றனர். பிபிஎப் பங்களிப்பின் வட்டிவிகிதத்தை அரசு ஆண்டுக்கு 7.9 சதவிகிதம் என்பதிலிருந்து ஆண்டுக்கு 7.1 சதவிகிதமாக குறைத்ததே அந்த அதிர்ச்சியாகும், அதுவும் மிகப்பெரிய 80 அடிப்படை புள்ளிகள் குறைப்பு. இந்த புதிய பிபிஎப் வட்டி விகிதம் ஏப்ரல் 1, 2020 முதல் மார்ச் 31 2020 வரையான காலத்திற்கு இருக்கும். தபால் நிலைய சிறு சேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதங்கள் நிதியாண்டின் ஒவ்வொரு காலாண்டின் தொடக்கத்திலும் அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்டு திருத்தப்படுகின்றன. NSC, KVP, SCSS, SSY உட்பட மற்ற எல்லா தபால் நிலைய திட்டங்களுக்கும் வட்டி விகிதம் வெகுவாகக் குறைக்கப்பட்டுள்ளன.
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ
வட்டி விகிதத்தில் குறைப்பு என்பது உங்கள் பிபிஎப் இருப்பு முன்பை விட 0.8 சதவிகிதம் குறைவாக சம்பாதிக்கும், பிபிஎப் மீதான் வட்டி கூட்டு வருடாந்திர அடிப்படையில் மேற்கொள்ளப்படும், மேலும் உங்கள் பிபிஎப் முதிர்வுத் தொகையின் மீதான தாக்கமும் மிகபெரிதாக இருக்கும்.
வட்டி விகிதம் மற்றும் பிற காரணிகள் மாறாமல் இருக்கும் பட்சத்தில் உங்கள் பிபிஎப் கார்பஸில் 0.8 சதவிகித எவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை பார்ப்போம்.
ரூ .1.5 லட்சத்தை 15 ஆண்டுகளுக்கு 7.9 சதவீதத்தில் முதலீடு செய்தால், பிபிஎஃப் கார்பஸ் கிட்டத்தட்ட ரூ.43 லட்சமாக இருந்திருக்கும்.
இப்போது, ஆண்டுக்கு 7.1 சதவீத குறைந்த வட்டி விகிதத்தில் முதலீடு செய்தால் 15 ஆண்டுகளுக்குப் பிறகு பிபிஎப் கணக்கில் கிட்டத்தட்ட ரூபாய் 40 லட்சம் கார்பஸ் தொகை இருக்கும். அதாவது 15 வருடத்தில் குறைவான கார்பஸ் 7 சதவிகிதம்.
பிபிஎப் புக்கான வட்டி விகிதம் ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் மாறுபடும் என்பதை நினைவில் கொள்வது அவசியம். எனவே நீங்கள் பிபிஎப் கார்பஸை கண்டுபிடிக்க ஏதாவது பிபிஎப் கால்குலேட்டரை பயன்படுத்தினால் குறைந்த விகிதத்தை வைத்திருப்பது நல்லது.
ரூபாய் ஒரு கோடியைக் குவிப்பதற்காக அல்லது உங்கள் ஓய்வூதிய தேவைகளுக்காக பிபிஎப்பில் முதலீடு செய்வதற்காக நீங்கள் பிபிஎப்பில் சேமிக்கிறீர்கள் என்றால் நீங்கள் பிபிஎப் பில் போடும் சேமிப்பை மறு மதிப்பீடு செய்யுங்கள். பொது வருங்கால வைப்பு நிதி திட்ட விதிகள் 2019ன் கீழ் ஒரு நிதியாண்டில் பிபிஎப் கணக்கில் ஒருவர் குறைந்தபட்ச தொகையாக ரூபாய் 5,00/- மற்றும் அதிகப்பட்ச தொகையாக ரூபாய் 1.5 லட்சம் அல்லது மாதத்துக்கு ரூபாய் 12,500 முதலீடு செய்யலாம்.
எனவே ஒரு நிதியாண்டில் முதலீடு செய்வதற்கான அதிகபட்ச தொகை கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ரூபாய் ஒரு கோடி பெற எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொள்வதை விட, ஒரு கோடியைப் பெற எவ்வளவு கால அளவு எடுக்கும் என்பதை நீங்கள் அறிந்துக் கொள்ள வேண்டும்.
பிபிஎப் என்பது 15 ஆண்டுக்கான சேமிப்பு திட்டமாகும். ஆனால் ஒரு பிபிஎப் கணக்குதாரராக 15 ஆண்டுகள் நிறைவடைந்த பின்னர் 5 ஆண்டுகள் ஒரு தொகுதியில் பிபிஎஃப் கணக்கை நீட்டிக்க முடியும். பிபிஎப் கணக்கை பயன்படுத்தி நீங்கள் கோடீஸ்வரராக ஆக வேண்டும் என்று நினைத்தால், நீங்கள் பிபிஎப் இருப்பு ரூபாய் ஒரு கோடி ஆகும் வரை பிபிஎப் கணக்கை நீடித்துக் கொண்டே இருக்க வேண்டும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.