புடலங்காயில் சுவையான தொக்கு ரெசிபி செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
புடலங்காய் – 1
தக்காளி – 1
வெங்காயம் – 1
பூண்டு – 10 பல்
மிளகாய் தூள் – 3/4 ஸ்பூன்
மல்லித்தூள் – 1/2 ஸ்பூன்
மஞ்சள் தூள் – 2 ஸ்பூன்
நல்லெண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
கடுகு – 1/4 டீஸ்பூன்
வெந்தயம் – 1/4 டீஸ்பூன்
சீரகம் – 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
கொத்தமல்லி – ஒரு கைப்பிடி அளவு
செய்முறை
முதலில் புடலங்காயை கழுவி தோல் நீக்கி நறுக்கிக் கொள்ள வேண்டும். அடுத்து மிக்ஸி ஜாரில் போட்டு தண்ணீர் சேர்க்காமல் ஒன்றிரண்டாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
அடுப்பில் கடாய் வைத்து சூடானதும் அதில் நல்லெண்ணை ஊற்றி கடுகு, வெந்தயம், சீரகம் ஆகியவற்றை போடவும். அடுத்து பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயம் மற்றும் கறிவேப்பிலையை சேர்த்து அதனுடன் பூண்டை நன்றாக இடித்துப் சேர்த்துக்கொள்ளவும்.
அவை வதங்கியதும் அரைத்து வைத்திருக்கும் புடலங்காயை சேர்த்து அதனுடன் மிளகாய் தூள், மல்லித்தூள், மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு போன்றவற்றை சேர்க்கவேண்டும். கிளறிவிட்டு மூடி போட்டு 5 நிமிடம் வேக வைக்கவும்.
அடுத்து புடலங்காய் சேர்த்து சிறிது எண்ணெய் ஊற்றி கிளறி வேக விடவும். கடைசியாக அடுப்பில் இருந்து இறக்கும்போது பொடியாக நறுக்கிய ஒரு கைப்புடி கொத்தமல்லி தழையை தூவி இறக்கினால் கம கம புடலங்காய் தொக்கு ரெடி.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“