Tandoori, Sandwich Green Chutney Recipe Tamil : மாலை வேளை ஸ்நாக்ஸ் வகைகளை ஸ்பெஷலாக்கும் ருசியான புதினா சட்னி 15 நிமிடத்தில் ரெடி. ஒரு பாத்திரத்தில் அல்லது ஒரு சிறிய ஜாடியில் அரைத்த சட்னியை மாற்றி, காய்கறி கட்லெட், பிரட் பக்கோடா, பிரஞ்சு ஃப்ரைஸ், சீஸ் பால்ஸ், கபாப், பன்னீர் டிக்கா போன்ற ஸ்நாக்ஸ் உணவுகளுடன் இணைத்து சாப்பிடலாம். காற்று புகாத ஸ்டீல் பாக்சில் சேமித்து ஃப்ரிட்ஜில் வைத்துப் பயன்படுத்தலாம்.
தேவையான பொருள்கள் :
புதிய புதினா இலைகள் - 2 கப்
நறுக்கிய பச்சை மிளகாய் - 1 முதல் 2
நறுக்கப்பட்ட இஞ்சி - 1 இன்ச்
சாட் மசாலா - 1/2 டீஸ்பூன் அல்லது சுவைக்கு ஏற்ப
எலுமிச்சை சாறு - ½ டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - 2 டேபிள்ஸ்பூன்
செய்முறை :
புதினா இலைகளைத் தண்ணீரில் நன்றாக அலசி, அதனோடு பச்சை மிளகாய் மற்றும் இஞ்சியை மிக்சியில் சேர்த்துக்கொள்ளவும்.
இந்தக் கலவையோடு சாட் மசாலா, எலுமிச்சை சாறு மற்றும் உப்பு சேர்க்கவும். உங்களிடம் சாட் மசாலா இல்லையென்றால், ¼ டீஸ்பூன் உலர் மாம்பழ தூள் (அம்ச்சூர் தூள்), ¼ டீஸ்பூன் வறுத்த சீரகத்தூள் மற்றும் ¼ டீஸ்பூன் கருப்பு உப்பு சேர்த்துக்கொள்ளலாம்.
இதனோடு தண்ணீரைச் சேர்த்து மென்மையான சீரான நிலைக்கு அரைக்கவும். அரைக்கும் போது அதிக தண்ணீர் சேர்க்க வேண்டாம்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil