கடைகளில் கிடைக்கும் உணவுகள் மிகவும் ருசியானதாக தோன்றலாம். ஆனால் அவற்றில் உடலுக்கு தீங்கு விளைவிக்க கூடிய உணவு பொருட்கள் சேர்க்கப்பட்டிருக்கும் என்பது மறுக்க முடியாத உண்மை. அவற்றை தொடர்ச்சியாக சாப்பிடும்போது உடல் உபாதைகள் ஏற்பட்டு அவதிப்படுவோம். ஆக, நம் வீட்டு சமையலறையில் கிடைக்கக்கூடிய எளிமையானவற்றை வைத்து எப்படி ஆரோக்கியம் நிறைந்த சட்னி.
Advertisment
தேவையானவை:
பச்சை மிளகாய் – 2-3
புதினா இலைகள் – 1 கப்
கொத்தமல்லி – 3 கப்
மாங்காய் – 1
உப்பு – ¼ தேக்கரண்டி
பெருங்காயம் – ¼ தேக்கரண்டி
சீரகம் – 1 மேஜைக்கரண்டி
பூண்டு – 6-8 பற்கள்
இஞ்சி – 1 துண்டு
தண்ணீர் – ¼ கப்
செய்முறை:
புதினா மற்றும் கொத்தமல்லி இலைகளை நன்கு கழுவி அதன் தண்டுகளை வெட்டி கொள்ளவும். மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து பொருட்களையும் மிக்ஸியில் போட்டு அரைத்து கொள்ளவும். உப்பு மற்றும் காரம் உங்கள் தேவைக்கேற்ப சேர்த்து கொள்ளலாம்.
நன்கு மைய அரைத்த சட்னியை காற்று புகாட ஒரு ஜாரில் போட்டு ஃப்ரிட்ஜில் வைத்து கொள்ளலாம். ஒரு வாரம் வரை வைத்திருந்து சாப்பிடலாம்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil