இனி தயிர் சாதம் செய்தால், அத்துடன் சேர்த்து சாப்பிட, புதினா உருளைக்கிழங்கு வறுவல் செய்து பாருங்க.
தேவையான பொருட்கள்
5 ஸ்பூன் எண்ணெய்
1 ஸ்பூன் கடுகு
1 ஸ்பூன் சீரகம்
1 ஸ்பூன் உளுந்து
4 வத்தல்
1 கொத்து கருவேப்பிலை
கால் கிலோ உருளைக்கிழங்கு
கால் ஸ்பூன் மஞ்சள் தூள்
உப்பு
1 ஸ்பூன் கரம் மசாலா
அரை ஸ்பூன் மிளகாய் தூள்
அரை ஸ்பூன் மல்லித்தூள்
1 கை பிடி புதினா
செய்முறை : உருளைக்கிழங்கை நன்றாக வேக வைக்க வேண்டும். தொடர்ந்து ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து கடுகு, சீரகம், உளுந்து சேர்த்து, வத்தல், கருவேப்பிலை சேர்த்து கிளரவும். தொடர்ந்து உருளைக்கிழங்கு சேர்த்து மஞ்சள் பொடி, உப்பு சேர்த்து கிளரவும். தொடர்ந்து கரம் மசாலா, மிளகாய் தூள், மல்லித்தூள் சேர்த்து கிளரவும். புதினா சேர்த்து கிளரவும். சூப்பரான வறுவல் ரெடி.