Pudina rice recipe, pudina rice recipe in tamil : ஆரோக்கியம் நிறைந்த உணவுகளில் புதினா ரைஸூம் ஒன்று. புதினாவில் ஆண்டிஆக்ஸிடண்ட் இருப்பதால் செரிமானம் தூண்டப்படுகிறது. புதினாவை சாப்பிடுவதால் உடல் குளிர்ச்சியடைகிறது. புதினாவின் மேலும் சில நன்மைகள் இருக்கிறது.
புதினாவில் மென்தால் என்னும் ஆக்டிவ் எண்ணெய் இருக்கிறது. இதில் ஆண்டிபாக்டீரியல் மற்றும் ஆண்டிசெப்டிக் தன்மை இருக்கிறது. இது செரிமானத்தை சீராக்கி, வயிறு சம்பந்தமான நோய்களை போக்குகிறது. சளி தொல்லையால் முச்சுத்திணரல் அதிகமாக இருக்கும். புதினாவை சாப்பிடுவதால் மூக்கு மற்றும் தொண்டை பகுதியில் சளி தொந்தரவு நீங்கிவிடும். புதினாவில் ஆண்டி-இன்ஃப்ளமேட்ரி தன்மை இருப்பதால் நாட்பட்ட இருமல் குணமாகும். இப்ப புதினா ரைஸ் செய்யலாமா>
pudina rice recipe செய்முறை:
முதலில் சாதத்தை உதிரியாக வருமாறு வடித்து வைத்து கொள்ளவும். புதினாவை அலசி அதனுடன் 2 பச்சை மிளகாய், உப்பு ஒரு சிட்டிகை, சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து விழுதாக அரைத்து கொள்ளவும். தக்காளியை பொடியாக வெட்டிக்கொள்ளவும்.பச்சை மிளகாயை பொடியாக கட் செய்து வைக்கவும்.
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு இவைகளை போட்டு கலக்கி பிறகு பொடியாக கட் செய்த தக்காளி, பச்சை மிளகாயைச் சேர்க்கவும். அதன் பின் உப்பு, சாம்பார் பொடி, சிறிது எலுமிச்சை சாறு மற்றும் அரைத்த புதினா விழுதை போட்டு வதக்கவும். இரண்டு நிமிடம் கழித்து தயாராக வைத்துள்ள சாதத்தை கொட்டி கிளறவும். சுவையான, மணமான புதினா சாதம் தயார்.
இதனை குழந்தைகள் அதிகம் விரும்பி உண்பதோடு, உடல் நலத்திற்கும் நல்லது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Lifestyle News by following us on Twitter and Facebook
Web Title:Pudina rice recipe pudina rice recipe in tamil pudina rice in tamil pudina rice video
ஸ்டாலின் கையில் முருகன் வேல் : பிரபலங்களின் கருத்துக்கள் என்ன?
சிவகார்த்திகேயன் பட நடிகைக்கு திடீர் திருமணம் : கப்பலில் பணியாற்றும் மாப்பிள்ளை
கடும் கட்டுப்பாடுகளுடன் 44-வது புத்தக கண்காட்சி : வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
இணையத்தில் வைரலாகும் ”குக் வித் கோமாளி” சிவாங்கி, புகழ் வீடியோ
முதல்வன் அர்ஜூனாக மாறிய கல்லூரி மாணவி : உத்தரகண்ட் அரசு அசத்தல்