Advertisment

ரூ. 200 மாடித்தோட்ட ‘கிட்’ இலவசம்... புதுவையில் தொடங்கி வைத்த ரங்கசாமி!

புதுச்சேரி வேளாண்துறை சார்பில் மாடி தோட்டத்தை ஊக்கப்படுத்தும் வகையில் ஆடிப் பருவத்திற்கான காய்கறி விதைகள் தொகுப்பு பயனாளிகளுக்கு வழங்கும் நிகழ்ச்சியை முதலமைச்சர் ரங்கசாமி தொடங்கி வைத்தார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
 Puducherry CM N Rangaswamy provide 200 rupees Terrace Garden Kit Tamil News

முதலமைச்சர் ரங்கசாமி, வேளாண் அமைச்சர் ஜெயக்குமார் முன்னிலையில் பயனாளிகளுக்கு காய்கறி விதைகள் அடங்கிய தொகுப்பை வழங்கி நிகழ்ச்சியை தொடக்கி வைத்தார்.

பாபு ராஜேந்திரன் - புதுச்சேரி

Advertisment

புதுச்சேரி அரசு, வேளாண் நலத்துறை, தோட்டக்கலை பிரிவின் மூலம் புதுச்சேரி பகுதியில் தோட்டக்கலை பயிர் சாகுபடி பரப்பளவு மற்றும் உற்பத்தி திறன் அபிவிருத்தியை நோக்கமாக கொண்டு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தி வருகின்றது. 

புதுவை பகுதியில் உள்ள நகர மற்றும் கிராமப்புற மக்களுக்கு தேவையான பசுமையான மற்றும் தரமான காய்கறிகளை அவர்களின் வீட்டுப் புறக்கடை மற்றும் மாடியில் அவர்களே சாகுபடி செய்வதை ஊக்கப்படுத்தும் வகையில், ஊட்டச்சத்து காய்கறி தோட்டம் அமைக்க ரூபாய் 200 மதிப்புள்ள காய்கறி விதைகள் அடங்கிய தொகுப்பு நடப்பு 2024 ஆம் ஆண்டுக்கான ஆடிப்பருவத்தில் இலவசமாக வழங்கப்படுகிறது.

அதன்படி, முதலமைச்சர் ரங்கசாமி, வேளாண் அமைச்சர் ஜெயக்குமார் முன்னிலையில் பயனாளிகளுக்கு காய்கறி விதைகள் அடங்கிய தொகுப்பை வழங்கி நிகழ்ச்சியை தொடக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் சட்டப்பேரவைத் தலைவர் செல்வம் மற்றும் வேளாண்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

 

Puducherry
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment