Advertisment

ஆர்எக்ஸ் 100 யமஹா: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியின் தீராத பைக் காதல்

முதல்வர் ரங்கசாமி தான் ஆசையாக வாங்கிய ஜான் ராவ் 1987 ஆர்எக்ஸ் 100 யமஹா டூவிலரை இன்றும் உயிர் நண்பனாக பார்த்து வருகிறார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Puducherry

Puducherry

புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி  காபி பிரியர். அதேபோல தனது ஆர்எக்ஸ் 100 யமஹா வண்டி ஓட்டுவது அவருக்கு மிகவும் பிடிக்கும். தற்போது முதல்வராகி விட்டதாலும், போக்குவரத்து அதிகமாக இருப்பதால் தனது டூவீலர் அதிகமாக பயன்படுத்துவதில்லை.

Advertisment

இருப்பினும் தன்னுடைய டூவீலரை எந்தளவுக்கு நேசிக்கிறார் என்பதற்கு தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வரும் ஒரு வீடியோ சாட்சி.

முதல்வர் ரங்கசாமி தான் ஆசையாக வாங்கி ஜான் ராவ் 1987 ஆர்எக்ஸ் 100 யமஹா டூவிலரை இன்றும்  உயிர் நண்பனாக பார்த்து வருகிறார்.

பி வை 01 எஃப்3966. என்ற எண் கொண்ட இந்த வண்டி 1987ல் வாங்கப்பட்டது. அப்பொழுது அவர் இளமைப் பருவத்தில் இந்த வண்டியில் தான் எங்கும் செல்வது வழக்கம்.

Puducherry

புத்தாண்டு கோவிலுக்கு, தேர்தல் சமயத்தில் நாமினேஷன் தாக்கல் செய்வது, பிறந்தநாள் அன்று கோவிலுக்கு செல்வது, முதல் நாள் வாக்கு சேகரிக்கும் போது இந்த வண்டியில் சென்று வாக்கு கேட்பது, வேளாண் துறை அமைச்சராக இருக்கும் போது  விவசாயிகளை சந்திப்பது அனைத்துமே இந்த வண்டியில் தான்.

தற்போது மக்கள் முதல்வராக ஆனதால் அவரைப் பார்க்க  கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் இரண்டு சக்கர வாகனத்தில் செல்வதை நிறுத்தி விட்டார்.

ஆனால் அந்த வாகனத்தை இன்றும் தன் உயிர் நண்பனாக பாதுகாத்து வருகிறார். பாராளுமன்ற தேர்தல் வருவதால் தனது ஆர்.எக்ஸ் யமஹாவை சென்னைக்கு அனுப்பி சர்வீஸ் செய்து அவரது வீட்டிற்கு வந்தது.

சர்வீஸ் முடித்த ஊழியர்கள் அந்த வண்டியை, அவரது வீட்டில் இறக்கி வைத்து அவரிடம் சாவி ஒப்படைத்தனர்.

அதை மிக ஆசையாக பார்த்து தடவி கொடுத்தார் ரங்கசாமி. தற்போது பாராளுமன்ற தேர்தல் வருவதால்  என்ஆர் காங்கிரஸ், பாஜக கூட்டணியில் வேட்பாளர்  நாமினேஷன் தாக்கல் செய்யும்போது இந்த வாகனத்தை பயன்படுத்துவர் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆரம்ப காலத்தில் இந்த வண்டியில் சென்று தான் ரங்கசாமி காபி குடிப்பது வழக்கம்.

Puducherry

காபி விரும்பி ரங்கசாமி வாராவாரம் தன் நண்பருடன் விதவிதமான காபி ருசிப்பதை வழக்கமாக கொண்டவர்

அலியான்ஸ் ஃப்ரான்சே அருகில் உள்ள ஃப்ரெஞ்ச் ஃலோப்

ஆரோவில் மார்க் கபே

நேரு வீதி இந்தியன் காபி ஹவுஸ்

ஒயிட்டவுன் கோரமண்டல் கபே

இந்த இடங்கள் தான் அவர் பேவரைட் என்பது தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

செய்தி: பாபு ராஜேந்திரன், புதுச்சேரி

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Puducherry Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment