புதுச்சேரி மாநில தோட்டக் கலைத் துறையில், காய்கறி பழச்சாகுபடிக்கு மானிய திட்ட உதவி பெற விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, புதுவை மாநில வேளாண் (தோட்டக் கலை) கூடுதல் இயக்குநா் சிவராமன் வெளியிட்ட செய்திக் குறிப்பில், புதுவை வேளாண் மற்றும் விவசாயிகள் நலத் துறையின் தோட்டக் கலைப் பிரிவு மூலம் காய்கறி, பழச்சாகுபடி விவசாயிகளுக்கு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், விசைத்தெளிப்பான்கள், மண்புழு, உரத் தொட்டி அமைத்தல், காளான் உற்பத்திக் குடில் அமைத்தல், குறைந்தபட்ச பதப்படுத்தும் வசதியுடைய குளிரூட்டப்பட்ட வாகனம், பேக் ஹவுஸ், பண்ணைக் குட்டை அமைத்தல், பழம் மற்றும் காய்கறி தள்ளுவண்டி, நிழல்வலை குடில் மற்றும் பசுமைக்குடில் அமைத்தல் ஆகியவற்றுக்கான மானியம் பெறுவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதையும் படியுங்கள்: நீங்க வாங்குற பாலில் கலப்படம்? ஒரு சொட்டு இப்படி விட்டுப் பாருங்க!
விண்ணப்பங்களை தாவரவியல் பூங்காவில் உள்ள கூடுதல் வேளாண் இயக்குநா் (தோட்டக் கலை) அலுவலகத்தில் பெறலாம். மேலும், வேளாண் மற்றும் விவசாயிகள் நலத் துறை இணையதளம் மூலம் விண்ணப்பத்தை பதிவிறக்கமும் செய்துகொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வரும் ஜூன் 16-ஆம் தேதிக்குள் புதுச்சேரியிலுள்ள தாவரவியல் பூங்கா வளாகத்தில் செயல்படும் மாநிலத் தோட்டக்கலை இயக்கக கூடுதல் வேளாண் இயக்குநா் அலுவலகத்தில் வழங்க வேண்டும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பாபு ராஜேந்திரன், புதுச்சேரி
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil